Header Ads



இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் ஒபாமாவின் முதல் பயணம் இஸ்ரேலுக்கு..!


இஸ்ரேல் பிரதமர் வேட்பாளருக்கு கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்று புதிய பிரதமராக பெஞ்சமின் தேர்வானார். அவருக்கு ஒபாமா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், அரசு முறை பயணமாக இன்னும் சில நாட்களில் ஒபாமா இஸ்ரேல் செல்லவிருக்கிறார். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கான போடியில் இருந்தபோது இஸ்ரேல் சென்றார் ஒபாமா.   அதிபராக பதவியேற்றபின் இஸ்ரேல் செல்லும் முதல் பயணமாகும். 

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் ஒபாமா மேற்கொள்ளும் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக அமையும் என்று நம்பப்படுகிறது. இந்த பயணத்தின் போது முக்கிய பிரச்சனைகள் குறித்து  பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். சிரியா மற்றும் ஈரான் நாடுகளின் விவகாரங்கள் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெறப் போவதாக கூறப்படுகிறது. 

ஒபாமாவின் இஸ்ரேல் சுற்றுப்பயணத் தேதிகளை வெள்ளை மாளிகை விரைவில் அறிவிக்கும் என செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.  

No comments

Powered by Blogger.