வீரத்திடல் அல்- ஹிதாயா மகாவித்தியாலய மாணவர்களின் டெங்கு ஒழிப்பு ஊர்வலம்
(எம்.எம்.ஜபீர்)
சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு வீரத்திடல் அல்- ஹிதாயா மகாவித்தியாலய (நவோதய பாடசாலை) மாணவர்களும், சவளக்கடை பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து பாடசாலையின் சுற்றுபுற சூழலை சிரமதான மூலம் துப்புரவு செய்ததுடன், விழிப்புணர்வு ஊர்வலத்தையும் மேற்கொண்டனர்.
வீரத்திடல் அல்- ஹிதாயா மகாவித்தியாலய அதிபர் எம்.எல்.வதுர்த்தீன் தலைமையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வின் போது டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை இனங்கண்டு அங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவாக காணப்பட்ட பொருட்கள் அழித்தெழிக்கப்பட்டன.
டெங்கு விழிப்புணர்வு ஊர்வலத்தில் கமுஃசதுஃவீரத்திடல் அல்- ஹிதாயா மகாவித்தியாலய (நவோதய பாடசாலை) மாணவர்களும், சுற்றாடல் கழக அங்கத்தவர்களும் ஈடுபட்டனர். இதன்போது பிரதேச மக்களை விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊர்வலத்தில் நுளம்பு இனத்தை அழித்து நாட்டு மக்களை பாதுகாப்போம், உயிர் கொல்லி நுளம்பை அழித்து சூழலை பாதுகாப்போம், டெங்கு நுளம்பு பரவும் இடங்களை தடுப்போம், மக்களை பாதுகப்போம், உயிர் கொல்லி டெங்கு நுளம்பை அழிப்போம், சூழலை சுத்தமாக வைத்திருப்போம். போன்ற பததைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் டெங்கு நுளம்புகளை அழித்தொழிப்பது தொடர்பாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.
Post a Comment