Header Ads



அமெரிக்காவுடன் அணு ஆயுத பேச்சுக்கு தயாரில்லை


""அமெரிக்காவுடன், அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, ஈரான் தயாராக இல்லை,'' என, அந்நாட்டின் தலைவர் அயதுல்லா அலி காமேனி, தெரிவித்துள்ளார். ஈரான், அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா, குற்றம்சாட்டி வருகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென், "அணு ஆயுதம் தொடர்பான பிரச்னையை தீர்க்க, ஈரான் பேச்சு வார்த்தைக்கு முன் வரவேண்டும்' என, தெரிவித்திருந்தார்.இது குறித்து, ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கூறியதாவது,,

மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்காவின் திட்டங்கள் தோல்வி அடைந்து விட்டன. எனவே, எப்படியாவது வெற்றி பெறும் நோக்கில், அந்நாடு, ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஒருபுறம் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு, மறுபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு ஈரான் அடிபணியாது. நான் அரசியல் தூதன் அல்ல, புரட்சியாளன்.ஈரான் மீது பொருளாதார தடை நீடிக்கும் வரை, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது. இதுபோன்ற பேச்சுவார்த்தைகளால் எந்த பலனும் ஏற்படாது. இவ்வாறு அயதுல்லா அலி காமேனி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.