Header Ads



புறப்பட்டு வருகிறது புதிய சேனையொன்று.!



-மதியன்பன்-

புறப்பட்டு வருகிறது..
புதிய சேனையொன்று.!
துவேச ஆடையை 
தோளிலே சுமந்து கொண்டு..

பொதுவாக - 
பலமே இல்லாத சேனை யென்று
பலர்
பாhத்து ரசிக்கிறார்கள்.!

தாய்ப்பாலும் இல்லாமல்
புட்டிப்பாலும் குடிக்க முடியாமல்
சேரிக்குள் கிடந்த 
சில்லறைக ளெல்லாம்
சேர்ந்து கொண்டது இதனோடு...

பிரித்து ஓதி ஓதியே
பிரித்துவிட்டார்கள் எம்மை..
இப்போது
எரியவிடுகிறார்கள் 
இனத்துவேசத் தீயை...

ரங்கிரி வானொலியில்
ரீங்காரம் கேட்கிறதா..?
பொதுபல சேனையுடன்
சிங்கள ராவய புறப்பட்டு வருவதாக.. 

ஹலால் சான்றிதழ்
காலாவதியாக வேண்டுமாம்..?
அதற்குமுன்
காணாமல் போவார்கள் இவர்கள்.
மொத்தத்தில்
நாட்டின் பொருளாதாரத்தை
நசுக்கப் பார்க்கிறார்கள்..!

பள்ளிகளை
உடைத்தழித்தவர்கள்
பன்றியின் உருவத்திற்கு
அல்லாஹ்வின் பெயரை
அர்ப்பணம் செய்தவர்கள்.
அதிலே
சொர்ப்பனம் கண்டு கொண்டிருக்கிறார்கள்..!

இஸ்லாம் எழுச்சி பெறுவதையும்
ஈட்டியாய்
இதயத்தில் குத்துவதையும்
இவர்களால் 
ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனை
முளையிலேயே கிள்ளிவிட
முட்டாள் தனமாய்
கிளைகளைத் தேடுகிறார்கள்..
விழைவுகளையும், விபரீதங்களையும்
விளங்கிக் கொள்ளாமல்... 

ஆசி வழங்குகிறது
அரசும், ஆயுதப் படையும்..!
காசுகொடுக்கத் தேவையில்லை.
காவலுக்கு இருந்தால் போதும்.

இவர்களை 
கைது செய்ய முடியாமல்
காலாவதியாகிப் போனதா..?
நாட்டின் சட்டமும் இறைமையும்.!

புலிகளை ஒழித்து
முப்பது வருட யுத்தத்தை
முடிவுக்கு கொண்டு வந்தவர்களால்
ஏனிந்த 
சிறு கூட்டத்தை
சிறைபிடிக்க முடியவில்லை..?

அரசாங்கத்தையே
ஆட்டிப்படைக்கிறார்கள் இவர்கள்.!
நாட்டை-
ஆள்பவர்கள் யாரென்றும் புரியவில்லை.

நோலிமிட்டுக்குள் நுழைந்தவர்கள்
நோக்கம் நிறைவேறாமல்
இஸ்லாமிய  வங்கியை 
இப்போது இலக்கு வைக்கிறார்கள்..!

வீதியின் பெயர்ப்பலகை
விடிவதற்குள்ளாக
நாதியற்றுக் கிடக்கிறது
நம்மவர் பெயர் அழிபட்டுக்கிடக்கிறது.

ஜெய்லாணியில்
பள்ளிவாயல் பிரதேசம்
கள்ளத்தனமாய்
கபளீகரம் செய்யப்படுகிறது.

முஸ்லிம்களின்
கல்வி, பொருளாதாரம்
காணி விவகாரம்
அத்தனையும் இவர்கள்
அழித்துவிடத் துடிக்கிறார்கள். 

இத்தனைக்கும் மத்தியில்
எதுவுமே நடக்கவில்லையென்று
அரசாங்கம் அறிக்கைவிட-
நம் அரசியல் வாதிகளும்
அதனை 
ஆமோதித்துக் கொண்டிருக்கிறார்கள்...!





1 comment:

  1. மொடயேன்கள்,எவேங்களுக்கு குடும்பம் பிள்ளைகள் என்ற பொறுப்புகள் இல்லாமல் தான் சும்மா கத்தி திரிகிறங்கால்.

    ReplyDelete

Powered by Blogger.