Header Ads



அட்டாளைச்சேனையில் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு பாராட்டு


(T.K.Rahumathulla)

அட்டாளைச்சேனை பிரதேசசெயலக கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஓய்வு பெற்றுச் சென்ற கிராம உத்தியோகத்தர்களை பாராட்டிக் கௌரவித்தலும் 'தலையாரி' நினைவுப் பொன்னேடு வெளியீட்டு வைக்கும் விழாவும் நேற்று ஒலுவில் அல்-ஜாயிஷா வித்தியாலத்தில் கிராமசேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஸ்வர் தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண அமைச்சரின் செயலாளாரும் முன்னாள் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான யூ.எல்.ஏ. அஸீஸ் கலந்து சிறப்பித்துடன், அதிதிகளாக கிழக்குமகான வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஐ. சலாகுதீன், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா, இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர், ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா,மற்றும் உதவி பிரதேசசெயலாளர்களூனஎஸ். ஜெயரூபன்,ஏ.எச். அப்தல் லத்தீப் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர். 

இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கமாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸிடம் ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர் எம்.எஸ்.ஏ. நியாஸ் 'தலையாரி' நினைவுப் பொன்னேட்டின் முதல் பிரதியினை கையளித்து வைப்பதையும், ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தாகளான யூ.எல்.முகைதீன்,எஸ்.எல். அபுதாலிப், பி.எம் காதர், ஐ.எல்.எச். அச்சிமுகம்மட், கே. அப்துல் ஹமீட்,யூ.எல்.முகம்மது அதீக், கே. றொஸ்லின் நோனா உள்ளிட்ட ஏழு ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்களும் இதன் போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.



No comments

Powered by Blogger.