Header Ads



பௌத்தர்களுக்கு இஸ்லாமிய வாழ்க்கை முறையை விளக்க ஏற்பாடு



(அபுதீனா) 

இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை முறையினையும்  நடவடிக்கைகளையும் பிழையாக விளங்கியுள்ள மாற்று சமூகத்திற்கு இஸ்லாமிய வாழ்க்கை முறைபற்றி நாடு தளுவிய ரீதியில் விளக்கமளிக்கும் வகையில் ஆராயும் கூட்டமொன்று (3.2.2013) மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் உணவகத்தில் சாய்ந்தமருது ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் சட்டத்தரணி அஸ்ஷேஹ் என்.எம்.அப்துல் முஜீப் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிண்ணியா ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அஸ்ஷேஹ் ஏ.எம்.ஹிதாயத்துல்லாஹ் தலைமையிலான உலமாக்களும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச உலமாக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் வாழும் பௌத்த சமூகத்தின் மத்தியில் முஸ்லீம்களின் வாழ்க்கை முறைபற்றி விரிவான முறையில் விளக்கமளிப்பதோடு அவர்கள் மத்தியில் நிலவும் முஸ்லீம்கள் பற்றிய பிழையான எண்ணகருவினை முற்றாக நீக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது சம்பந்தமாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதோடு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அம்பாறை , மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் ஜம்மியதுல் உலமா சபைகள் ஒன்றுகூடி ஊடகவியலாளர் மகாநாடு ஒன்றை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.

இந்த மகாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் , கிழக்கு மாகாண ஆளுணர் , முப்படைத் தளபதிகள் , பிரதேச செயலாளர்கள் , மாவட்ட செயலாளர்கள் ,திணைக்கள தலைவர்கள் , பாடசாலை அதிபர்கள்  மற்றும் சர்வமத  பெரியார்கள் கலந்து கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.





2 comments:

  1. Good work that our muslims brothers try to explaining about our religeon but bhudist monks never will going to understand nothing unfortunity!

    ReplyDelete
  2. தேநீர் கடைகளில் கூட்டம் போட்டுதான் இந்த விசயத்த பேசுவாங்களோ நம்ம மவ்லவி மார்.?
    தேநீர் கடைகளில் கூடிக் கலையும் கூட்டத்தால் எந்த பிரயோசனமும் கிட்டப் போவதில்லை.
    எமது பள்ளிவாசல்கள் சமூக தளங்களாக மாற்றப் படாத வரைக்கும் நம் சமுதாயத்துக்கு விடிவே இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.