முஸ்லிம்கள் பற்றிய சந்தேகங்களை நீக்கவேண்டும் - உலமா சபையிடம் மல்வத்து பீடாதிபதி
நாட்டில் பெரும்பான்மை பௌத்தசிங்கள மக்களிடம் முஸ்லிம்கள் குறித்து நிலவும் சந்தேகங்கள் நீக்கப்பட வேண்டுமென மல்வத்து பீடாதிபதி திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் அமைந்துள்ள மல்வத்துபீடாதிபதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை, 27 ஆம் திகதி ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலமாசபை தலைவர் றிஸ்வி முப்தி தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்ததாவது,
மல்வத்து பீடாதிபதிபதியுடனான சந்திப்பு குறித்து ஜம்மியத்துல் உலமா சபை மகிழ்வடைகிறது. மிகவும் சிநேகபூர்வமாக இச்சந்திப்பு நடைபெற்றது. முஸ்லிம்களின் ஹலால் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு சிங்கள மக்களிடையே சந்தேகங்கள் நிலவுவதாக இதன்போது மல்வத்து பீடாதிபதி சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக ஹலால் தொடர்பில் நாட்டு மக்களிடையே நிலவிய சந்தேகத்திற்கு முஸ்லிம்கள் தரப்பில் எப்போதே பதில் வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், எனினும் இது காலம் கடந்துவிட்டதாகவும் சில சந்தேகங்களுக்கு இது காரணமாக அமைந்துவிட்டதெனவும் மல்வத்து பீடாதிபதி மேலும் கூறினார்.
பௌத்தசிங்கள மக்களிடையே இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்து நிலவும் மூலம் சில சந்தேகங்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டாது மேலோட்டமாக அதுகுறித்து பேசினார். மல்வத்து பீடாதிபதியின் அந்த கருத்துக்களிலிருந்து எமக்கு அந்த சந்தேகங்களை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
ஜம்மியத்துல் உலமா சபையானது நாட்டின் சமூக ஒற்றுமைக்கு ஆற்றும் பங்களிப்பு குறித்து மல்வத்து பீடாதிபதிக்கு விளக்கிகூறியது. மல்வத்து பீடாதிபதியின் முஸ்லிம்கள் தொடர்பான சில சந்தேகங்களை போக்கவும் இதன்போது ஜம்மியத்துல் உலமா முயன்றதாகவும் முபாரக் மௌலவி மேலும் தெரிவித்தார்.
Thoongufanai thaan thatti eluppa mudiyum
ReplyDelete