இலங்கையில் இனி இஸ்லாம் இனிக்குமா..??
(MIFRAAZ SHAHEED
TIANJIN MEDICAL UNIVERSITY - CHINA)
அஸ்ஸலாமு அழைக்கும்
ஹலால் தொடர்பாக இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு நகர்வுகளையும் JAFFNA MUSLIM இணைய தளத்தின் ஊடாகவும் Facebook பகிர்வுகளின் ஊடாகவும் அவதானித்து வருகின்றோம் jazakallahu hairan.
இங்கே சீனாவில் எனது பல்கலைகழகத்தில் கல்விகற்கும் இலங்கை முஸ்லிம் நண்பர்கள் அனைவரும் சிங்களம் படித்தவர்கள் அதனால் அவர்களுக்கு தமிழ் வாசிக்க தெரியாது JAFFNA MUSLIM இணையதள செய்திகளை நானே வாசித்து சொல்பவனாக இருக்கிறேன் alhamdulillah.
இங்கே எனது மனதில் பட்ட சில நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..!
ஹலாலின் வாயிலை விடுத்த காலக்கெடுவுக்கு முன்பே பௌத்தர்களுக்கு மூடிவிட்டோம் என்று மார்பு தட்டபோகும் பொது பல சேனாவும் , முஸ்லிம்களுக்கான தனித்துவமான ஹலாலை பலத்த இழுபறிக்கு மத்தியில் காப்பாற்றி விட்டோம் என்று நிம்மதி பெரு மூச்சு விடும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவும் சரி சமமான புள்ளிகளுடன் முதல் ஆட்டத்தை இடைவேளைக்காய் நிறுத்தியுள்ளன.
அடுத்த விசில் எப்பொழுது அடிக்கப்போகிறார்கள் என்று தெரியாமல் முஸ்லிம்கள் மனவேதனையோடும் அல்லாஹ்வின் துஆ ஓடும் காத்திருக்கிறார்கள்.
இருக்கும் இடைவேளையில் ஜமிய்யதுல் உலமா அவ்வாறு செய்திருக்கலாம் இவ்வாறு செய்திருக்கலாம் என்று விதண்டாவாதம் பேசுவதையோ அல்லது எமது பள்ளிவாசலுக்குள் பொது பல சேனாவுக்கு எதிராக வானம் கிழியும் அளவுக்கு வீராவேசம் பேசுவதையோ விட்டுவிட்டு அடுத்த அரை ஆட்டத்தை எப்படி தக்க வைப்பது என்பதையும் முதல் ஆட்டத்தின் இழப்பீடுகளை எவ்வாறு சரி செய்வது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
முதலாட்டத்தில் உள்ள இழப்பீடுகளுக்காக முஸ்லிம்களில் உள்ள அனைத்து துறை சார்ந்த பொருளாதார நிபுணர்களையும் தனவந்தர்களையும் இணைத்து முஸ்லிம்களுக்கான தனியான பொருளாதார சந்தைக்கான அஸ்திவாரத்தை இடுவதும் அதற்கான வழி காட்டல்களை கொடுப்பதும் அதற்கான தொழில்நுட்பத்தை தேடுவதும் இன்றைய இலங்கை முஸ்லிம்களுக்கு பர்ளு கிபாயாவாக அமையலாம்.
இந்த வழிமுறை ஒன்றே சிங்கள பேரினவாதிகளை அவசரபுத்தியுடன் தெரியாத்தனமாக முஸ்லிம்களின் ஹலால் உரிமையில் கை வைத்து விட்டோம் என்று கைசேதப்பட வைக்குமே தவிர எமது ஊடக அறிக்கைகளோ உள்ளூர் பேச்சுக்களோ அல்ல.
சமூகத்தின் அடுத்த பிரிவினர் தடுப்பாட்டதுக்கு தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் கடந்த ஆட்டத்தில் கற்ற பாடங்களையும் விட்ட பிழைகளையும் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
சர்வதேச அல்லது மத்திய கிழக்கு அரசியலை பகுப்பாய்வு செய்யும் எமது அறிஞர்கள் உள்நாட்டு தலைமைத்துவத்துக்கான படிக்கல் பற்றியும் கொஞ்சம் தமது பத்திரிகைகளில் இடத்தையும் மேடைகளில் நேரத்தையும் செலவிடுவார்கள் என்றால் எதிர்காலத்தில் இலங்கையில் இஸ்லாம் இனிக்கும்.
நடுவர் வாயிலே விசிலை வைப்பது போல தூரத்தில் தெரிகிறது... உங்கள் பிரசன்னத்துக்காக மைதானம் காத்திருக்கிறது... தேவை ஏற்படின் ரசிகர்களும் மைதானத்தில் குதிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்...!!
hayatumohmed
ReplyDeletehaytumohamed,
22february2013
jemyatul ulama halal sanrital videyatil allahvinarulal saturiyemahe edutte mudivukku kadduraiyalerin etirvu kooral yatarte poorvemahe amaintullatu,averetu achemum sariyahevey therihiretu.
jazakallahu hair brother we need this
ReplyDeletethayavu seithu muslimkal halal illatha unavai unna veendaam please
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் bro mifraaz shaheed,அவர்களே இதுவரை ஆடிய
ReplyDeleteஆட்டத்தில்,விட்டதொட்ட குறைகளை ஆராய்ந்து பார்த்து ஆடுகளத்தில்
சிறப்பாட்டத்தை வெளிப்படுத்த முனைய வேண்டும்.
nice comments....
ReplyDeleteWell said brother, this is really a chance to our Muslim Umma to produce our own Halal food in every products without depending on the non-muslim products. It is chance and a great challenge to our businessmen to think. Our Muslims are leading business people and why cant we produce our own halal foods. We can brothers, lets us try to take the challenge and prove what this stupid monks said are all against them finally, with help of almighty Allah...!
ReplyDeleteAllahu Akbar...!
Ellarum 5 neramum tholudu paawatula irundu welavi tawba seydu Eemana urudy paduttunga Allah ongaku Padukaapu alippan insh allah, owwattra kora pudici kondu irikkama ninga ongada pawangala ellam vittu suttam aawunga insh allah allah vetrya taruvan nanga paawatta udama ulama sabaya kora pudici wela illa,
ReplyDeleteJazakallahu khair for the nice idaa give to muslim umma.
ReplyDeletewonderful you a right brother ,jazakallhu kayra.
ReplyDelete• விளித்தெழும் இலங்கை முஸ்லிம்களி நன்றி பொது பால சேனாவுக்கு
ReplyDelete• அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களை ஒரு போதும் கைவிடமாட்டான்
• சர்வதேசத்திற்கு படம்பிடித்துக்காட்டியுள்ள உண்மைகள் மேலும் முஸ்லிம் பொருளாதாரத்தை வளர்க்க வழிவகுத்துள்ளது.
• உலகம் எமக்கு என்ன நடக்கின்றது என்பதை தெளிவாக அவதானிக்கின்ற நேரம்
• முஸ்லிம்களின் பொருளாதாரம் முடக்கப்பட திட்டங்கள் தீட்ப்பட்டு செயற்படுத்தும் தர்னம்
• இதனால் முஸ்லிம்களின் பலம் குறைந்து அரிசியல் பொருளாதார விழு;ச்சியின் எதிர்பார்ப்பு
• எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி மத்திய கிழக்கு நாடுகளின் உதவிகளை அதிகமாகப் பெற்று
• முஸ்லிம்களின் நிலையை உறுதிப்படுத்தும் உண்ணத பணியில் ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் அரசியல் வாதிகள் எல்லோரும் ஒன்றினைந்து முஸ்லிம் புத்தி ஜீவிகளுடன் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்
• ஏம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாத்து நாட்டுக்கும் அதன் விசுவாசத்திற்கும் மேலும் வலுவூட்டும் சிறந்த இஸ்லாமிய பொருளாதாரத்தை கட்டியெலுப்பி அதனால் நாட்டின் பொருளாதாரத்தை விரியடையச்செய்தல்
• ஹலால் உணவுகளைத் தயாரித்து ஏற்றுமதிக்கும் உள்நாட்டு முஸலிம்களுக்கும் விநியோகிக்கும் முதலீட்டுத்திட்டத்தை வரைந்து முஸ்லிம் நாடுகளுக்கு சமர்ப்பித்து அரசுடன் குறிப்பிட்ட நாடுகள் முதலீட்டுத்திட்டத்தை கலந்துரையாடச் செய்தல்
• மேலும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை மையப்படுத்திய பொருளாதாரத்திட்டங்களையும் வெளிநாட்டு உதவிகளையும் கோரல்
• மேலும் முஸ்லிம்களின் கல்வி கலாசார சமய சமூகப்பொருளாதாரங்களிலும் நெருக்குவாரங்கள் தலைதூக்கியுள்ள நிலையில் மதினுட்பத்துடன் ஆராய்ந்து சர்வதேச முஸ்லிம்களின் உம்மாவுடன் இணைந்த மசூராக்களின் அடிப்படையில் இயங்குதல்
• ஆரசியல் வாதிகளும் ஏனைய முஸ்லிம் கட்ச்சிகளும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைய கருத்தில்கொண்டு சாதகமான காய்நகர்த்தல்களை சிறப்பாக செய்துமுடிக்க முனைதல்
• அல்லாஹ்விடம் கையேந்தி தொழுது குனூத் ஓதி மன்றாடி வரும் எமக்கு அல்லாஹ் எமது சிறு முயற்ச்சியை எதிர்பார்க்கின்றான் எமது ஒற்றுமையும் செயற்பாடும் அல்லாஹ்வுக்கு பொருத்தமாக அமையுமாயின் பொருந்திக்கொள்ளும் அல்லாஹ் வெற்றியை எம்பக்கம் வைத்திருக்கின்றான்
• எனவே சகோதார்களே அல்லாஹ் உங்களுக்கு அருளியுள்ள இந்த சமூகத்தளத்தை நல்லவழியில் சாத்தியமான பணியில் உங்களது காலங்களையும் நேரங்களையும் செலவழியுங்கள் எனக்கேட்டுக்கொள்கின்றேன்.