அக்குறணை பிரதேச சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
(ஜே.எம்.ஹபீஸ்)
அக்குறணைப் பிரதேச சபை 20-02-2013 பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். பிரதேச சபையின் உபதலைவர் அமரஜீவ இந்திரகுமார பிரதேச சபையின் செயலாளர் டி.எஸ்.ராஜபக்ஷ என்பவர் மீது மேற்கொண்ட மிரட்டல் நடவடிக்கை காரணமாகவே தாம் இவ்வாறு நியாயம் கேட்டு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி மேவுலும் தெரிய வருவதாவது,
அக்குறணை பிரதேச சபையின் உப தலைவலர் அமரஜீவ இந்திரகுமார அதன் செயலாளர் டீ.எஸ்.ராஜபக்ஷ அவர்களை மிரட்டிய சம்பவம் ஒன்றை எதிர்த்து சபையின் அனைத்து ஊழியர்களும் இன்றுமுதல் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர.
அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்த ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக உப தலைவருக்கும், செயலாளரும்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் அப்போது உப தலைவர் செயலாளரை கடுமையாக மிரட்டியதாகவும் சபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக அக்குறணை பிரதேச சபையின் செயலாளர் டீ.எஸ். ராஜபக்ஷ அலவத்துகொடை பொலீஸில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார். உப தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் வரை தமது பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடரும் என அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment