முஸ்லிம் விதவைப் பெண்ணிக் கடையில் காடைத்தனம் செய்த வெறியர்கள்..!
கொ(h)ரகொட என்கின்ற கிராமம் அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குற்பட்டது. இக்கிராமத்தைச்சூழ சிங்களக் கிராமங்கள் காணப்பட்ட போதும் இங்கு முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். நேற்றிரவு அதாவது (2013 - 02 - 26) நான் வீட்டு முற்றத்தில் ஓய்வாக அமர்ந்திருந்தேன்.
திடீரென்று யாரோ சிங்கள மொழியில் தகராறு பண்ணும் சத்தம் கேட்டு வெளியில் இறங்கினேன். அங்கே நான் கண்ட காட்சி என் மனதை வெகுவாக நோகடித்தது.
ஆம்..
ஒரு முஸ்லிம் விதவைப் பெண்ணின் 4 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பலைகையினால் ஆன சாப்பாட்டுக்கடையை ஒரு சிங்கள காடையன் உடைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஆதரவாக அவனது சகாக்கள் இருவரும் இருந்தனர். கடையை உடைத்துக் கொண்டிருந்தவன் மூக்கு முட்டக் குடித்து விட்டு தூஷன வார்த்தைகளை நாகூசாமல் அள்ளி வீசிக்கொண்டிருந்தான்.
ஊர் மக்கள் ஒன்று கூடி விட்டனர். என்ன ஏது என்று வினவிப் பார்க்க இரண்டு ஊர்ப்பெரியவர்கள் அவனோடு போய் கதைத்து சமதானப் படுத்த முற்பட்ட போது அவன் ஒரு முஸ்லிம் வயோதிபப் பெரியவருக்கு ஓங்கி கன்னத்தில் ஒரு அறை விட்டான்.
நிலமை மோசமாவதை உணர்ந்த நாம் உடனடியாக அக்குரஸ்ஸ பொலிசுக்கு தொலைபேசி மூலம் அறிவித்தோம். அந்த சிங்கள காடையனோ தான் அங்கிருந்து போகப்போவதில்லையென்றும் இங்கே ஆண்கள் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரேனும் இருப்பின் தன்னுடன் வந்து மோதிப் பார்க்குமாறும் அதற்கு தைரியம் இல்லவிட்டால் பொலிஸாரை வரச் சொல்லும் படியும் வெறி தலைக்கேறிய வண்ணம் கத்திக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் பொலிசார் அந்த இடத்தை வந்தடைந்தனர். பொலிசாரைக் கண்டதும் வீராப்பு பேசிய சிங்களக் காடையன் தலை தெறிக்க ஓடத்தொடங்கினான். பொலிசார் அவனை உடனே கைது செய்தனர். பிரச்சினைகளை கேள்விப்பட்ட குறித்த காடையனின் சகோதரரான பிரதேச சபை உறுப்பினர் தான் அதற்கான நஷ்ட ஈட்டை தருவதாக கூறிச்சென்றார்.
இத்தனைக்கும் பிறகு இதன் பின்னனி என்ன என்பது பற்றி ஆரய்ந்து பார்தேன். அப்போதுதான் இதன் பின்னனியிலும் க(h)லால் பிரச்சினைதான் உள்ளது என்பது தெரிய வந்தது. ஆம்.. இந்த கிராமங்களை சூழவுள்ள சிங்களக் கிராமங்களிலும் க(h)லால் எதிர்ப்பு நோட்டீஸ்கள் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் அதிலே முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தாகவும் அறியக்கிடைத்தது.
சம்பவ தினம் இந்த காடையர்கள் மூவரும் குறித்த கடைக்கு சாப்பாட்டுக்கு வந்துள்ளனர். அந்த நேரம் "அப்பிட்ட க(h)லால் எபா. க()hராம் தீபன்" என குறித்த விதவைப் பெண்ணின் 17 வயது மகனிடம் சண்டை பிடித்துள்ளனர். அதன் பின்னர் அங்கே இருந்த இன்னுமொரு முஸ்லிம் இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் குறித்த இளைஞன் பிரச்சினைப்படாமல் பொறுமையாக இருக்கவே மென்மேலும் தாக்க முற்பட்டுள்ளனர். தொடர்ந்தும் அடி வாங்கிக்கொண்டிருக்க முடியாமல் போகவே அந்த இளைஞன் அந்த காடையனையும் தாகியுள்ளார். இதன் பின்னரே பிரச்சினை பெரிதாகி உள்ளதாக அறியக்கிடைத்தது.
முஸ்லிம் விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மிக மிக சிரிய கூட்டத்தினரே என சாக்குப்போக்கு சொல்லியே அச்சிந்தனையை சிங்களவர் மத்தியில் தூவ இடமளித்துவிட்டார்கள் நம் அரசியல் ஆன்மீக தலைவர்கள்.
ReplyDeleteகுறித்த சம்பவத்திற்கு நஷ்ட ஈடு வழங்கினாள் மட்டும் போதுமா? குற்றவாளி தன்டிக்கப்பட வேண்டியதில்லையா?