பாராளுமன்றத்தில் பன்றி இறைச்சி விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு - அஸ்வர் எம்.பி.
(எம். எஸ். பாஹிம்)
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவகத்தில் பன்றி இறைச்சி பரிமாறப்படுவதை முஸ்லிம் எம்.பிக்கள் மட்டுமன்றி அதிகமான சிங்கள எம்.பி. களும் எதிர்ப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் எம்.பி.,
சபாநாயகரின் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற விவகார கூட்டத்தில் பன்றி விவகாரம் ஆராயப்பட்டுள்ளது. முஸ்லிம் எம்.பிக்கள் ஆட்சேபிப்பதால் பன்றி இறைச்சியும் தமிழ் எம்.பிக்கள் எதிர்ப்பதால் மாட்டிறைச்சியும் நீண்டகாலமாக பாராளுமன்றத்தில் சமைக்கப்படுவதில்லை என்றார்.
இதேவேளை முஸ்லிம் எம்.பிக்களுக்கென தனியான உணவகம் ஒன்றை உருவாக்குமாறு சபாநாயகரை கோரவும் சில எம்.பிக்கள் தீர்மானித்துள்ளனர். .
சமுதாயத்த தின்றது போதாதா? அங்க போயும் சாப்பாடுதான் பிரச்சினை! அங்கு பன்றி இறைச்சி இருந்தால், வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு செல்லுங்கள். உங்களை அங்கே அனுப்பியது சாப்பிட அல்ல. சமுதாய பிரச்சினையை கொண்டு செல்ல.. கோமாளிக் கூட்டம்....
ReplyDeleteஜனாதிபதிக்கு மட்டுமல்ல முழு உலகத்துக்கே தெரியும் . என்ன அவரின் கவனத்துக்கு கொண்டுவருவது அவருக்கு தெரியாமலா பார்லிமென்டில் பன்றி இறைச்சி அமூளுக்கு வந்தது . இது எல்லாம் வெறும் நாடகம் அதுமட்டுமல்ல மாட்டிறைச்சி என்ன புத்த சமயதவர்களுக்கு புசிக்க முடியுமா ? அவர்களுக்கு அது தடுக்கப்பட இறைச்சி அல்லவா ? ஜீவகாருன்ன்யம் பார்ப்பவர்கள் அல்லவா ? எங்கே சம்பிக்க ரணவக ? எங்கே போதுபலசெனா ? எல்லாம் அரசியல் நாடகம் .. அஸ்வர் நானா இப்பதான் சாரத்த மடித்துக்கொண்டு ஜனாதிபதியின் காலில் விழப்போகின்றார் ?
ReplyDeleteஎமது நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக எவ்வளவோ பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்க அதற்கு எதிராக ஒருவனும் பாராளுமன்றத்தில் வாய் திறக்கவில்லை....இப்போது பாராளுமன்றத்தில் பன்றி இறைச்சி பரிமாறப் படுவதற்காக தனியான சிற்றுண்டி சாலை வேண்டும் என்று ஜனாதிபதியை கோரப்போகிரார்கலாம்.
ReplyDeleteஉங்கள தின்றத்துக்கா நாங்க பாராளுமன்றத்துக்கு அனுப்புன ????
நம்மைபோன்ற முட்டாளுகள் இலங்கை தவிர உலகிலேயே இல்லையாம்.
ReplyDeleteஇவனுகள் கன்டீனுக்குப்போக வாக்கு கேட்டிருக்கானுகள் நாமதான் தப்பு தப்பாக வாக்குப்போட்டு பராளுமன்றதிற்க்கு அனுப்பிவிட்டோம்.
சார் இந்த வயசுலயும் உங்களுக்கு இந்த சீனி கீனி வியாதிகள் வரவில்லையா ?