வெல்லும் வரை வழிபார்த்திருப்போம்...!!
சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு பெயர் மாற்றம் பற்றிய 'தினமின' விளம்பரத்தில் இப்படியான ஒரு பெயரையும் ஊரையும் வாசித்த நினைவு உண்டு. எனவே முன்னர் இஸ்லாமிய பெயரில் வாழ்ந்த ஒரு குடும்பமோ தெரியாது. எது எப்படியானாலும் இதன் பிறகு இதுவும் நடக்கும். இதற்கு அப்பாலும் நடக்கும் எனவே முஸ்லிம் சமூகம் விழிப்புடன் செயற்படுவது அவசியம்.
நாம் மையத்தை எப்படி அடக்குவது என்று ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருப்போம். துவா ஓதுவோமா? தேவையா? தல்கீன் ஓதுவதற்கு ஆதாரம் உண்டா? ஊர் சம்பிரதாயமா? ரசூல்காட்டிய வழியா? என்று என்ன என்ன தலைப்புக்களில் எல்லாம் ஆராய்ச்சி செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்து கொண்டிருப்போம்.
மறுபுறம் எமது அரசியல் தலைவர்கள் காய்நகர்த்தும் வரை காத்திருப்போம். அரசியல் சாணக்கியத்தால் வெல்லும் வரை வழிபார்த்திருப்போம்.
எமது மூதூர் நண்பர் சொன்னமாதிரி எமது அரசியல் தலைவர்களுக்கு அழிந்து போகும் கதிரையையும், தேய்ந்து போன ஆயுளையும் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கச் சொல்லி நாம் இப்படியான ஆபாண்ட அல்லது பலாத்கார யுகத்தில் மாட்டி எல்லாவற்றையும் இழந்தவர்களாகுவதா என்று சிந்திப்போம்.
இது அப்படி இருக்க உலமாக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்த படத்தில் பாருங்கள். அப்பாவி உலமாக்கள் என்ன செய்ய..?
அடுத்தகட்ட காய்நகர்த்தல் அதுவாகத்தான் இருக்கும். ஹலால் சான்றிதலுக்கான அநியாய நிதியை பலவந்தமாக உம்மிடமிருந்து பறித்தெடுக்கப் போகிறார்கள் என்பதை அது கட்டியம் கூறுகிறது.
பெரிய இடத்து ஆசிர்வாதம் இருக்கும் வரை அவர்களுக்கு வெற்றி.
நாம் பள்ளிலும் கபுரடியிலும் மற்றவர் பல்லை உடைத்துக்கொண்டு எங்களுக்கு வெற்றிகிடைக்க புதிய மார்க்கம் ஒன்று தேடிக் கொண்டிருப்போம்.
முஸ்லிமகளுக்கெதிராக பிஞ்சு உள்ளங்களில் நச்சு வித்துக்கள் விதைக்கப் படுகிறது. அதனை கண்டும் காணாதவர்களாக நாம் கபுரடியில் வீரம் காட்டுவதிலும் கண்டி குருநாகல் வீதியில் ஓட்டப் பந்தயம் நடத்துவதிலும், பாராளுமன்றக் கதிரைகளில் அமர்ந்து கொண்டு சமுகத்திற்கு எதிரான வார்த்தைகள் வரும் போது கைதட்டுவதற்கு ஆயுள் தேய்ந்த பிரதி நிதிகளை அனுப்பிக்கொண்டும் இருப்போமா? சிந்தயுங்கள். முடியாவிட்டால் யாரிடமாவது கேட்டாவது தெரிந்து கொள்ளுங்கள்.
பெருமைக்ககும் புகழுக்கும் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் ,இஸ்லாத்தையும் சேர்த்து சொள்ளி கொடுதிருந்தால்.இப்படி தலையில்
ReplyDeleteகை வைக்க வேண்டி நிலை வநதிரிக்காது ------(((((((( அதனால் நபி வழியை அமுல்படுத்த நினைக்கும் நல்லோரை விமர்சிப்பது மஹா தவறு ))))))) சரியான இஸ்லாம் படித்தால் இப்படி எமது சமூகம் செல்லாது வெறுமனே மூட நம்பிக்கையால் வால்தான் இது பாரிய விஷயம் இல்லை
அல்ஹம்துளில்லாஹ் அல்லாஹ் நாடிய படி தான் எல்லாம் நடக்கும் இருந்தாலும் எங்களுக்கு எங்கள் ரசூல் ஸல் அவர்கள் கட்டித் தந்த முன்மாதிரிகள் இருக்க வேறு சில முன்மாதிரிகளை பின்தொடரும் போது அதற்கமைய அல்லாஹ்விடத்திலிருந்து சோதனைகளும் வேதனைகளும் வந்து சேரும் என்பதில் எல்லின் முனை அளவில் கூட சந்தேகம் இருக்காது யாருக்கென்றால் யாரிடம் அல்லாஹ்வின் கட்டளையும் ரசூல் ஸல் அவர்களின் அழகிய முன்மாதிரி இருக்கிறதோ அவர்களுக்கு.
ReplyDeleteபிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் அல்லது சோதனைகள் ஏற்படும் போதெல்லாம் அல்லாஹ்விற்கு அஞ்சி கண்மணி ரசூல் ஸல் அவர்கள் காட்டிச் சென்ற குர்ஆன் ஹதீஸ் வழியில் தீர்வை தேடுவோமாக இருந்தால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்பதில்
எல்லின் முனை அளவில் கூட சந்தேகம் இல்லை.
இன்று முஸ்லிம்களுக்கு உலக அளவில் சோதனைகளும் வேதனைகளும் இருந்துகொண்டே இருக்கிறது, இதை ஒரு ஒரு குடும்பமாக பிரித்து பார்த்தாலும் ஊர் ஊரக பிரிதுப்பார்த்தாலும் நாடு நாடக பிரிதுப்பார்த்தாலும் கிடைக்கும் விடை ஒன்றுதான் "எங்களுக்கு எங்கள் ரசூல் ஸல் அவர்கள் கட்டித் தந்த முன்மாதிரிகள் இருக்க வேறு சில முன்மாதிரிகளை பின்தொடரும் போது அதற்கமைய அல்லாஹ்விடத்திலிருந்து சோதனைகளும் வேதனைகளும் வந்து சேருகிறது