ஒஸாமா பின்லேடனை படுகொலை செய்தவனுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்..!
ஒசாமா பின்லேடனை 3 முறை சுட்ட கமாண்டோ வீரர் தனது குடும்ப உறுபினர்களின் பாதுகாப்பு குறித்து அச்சமடைவதாக தெரிவித்துள்ளார்.
2011-ம் ஆண்டு மே மதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த 'நேவி சீல்' என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது.
நேற்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு அந்த தாக்குதலில் பங்குகொண்ட கமாண்டோ வீரர் பேட்டி அளித்தார். அவர் தனது அடையாளங்களை வெளியிடக்கூடாது என்கிற வேண்டுகோளோடு இந்த பேட்டியை அளித்தார்.
தற்போது வேலை இல்லாமல் பணச்சிக்கலில் இருப்பதாகவும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து அச்சம் அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
2012-ம் ஆண்டு ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். இதன் பிறகு தனது குடும்பத்தாரின் மீது பழிக்குப்பழி தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்று பயப்படுவதாகவும், இதற்குப் பிறகு ஒரு சாதாரணக் குடிமகனாக எப்படி வாழ்வது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றி அவர் கூறியதாவது-
பின்லேடன் தனது இளம் மனைவியுடன் அபோடாபாத் கட்டிடத்தில் இருட்டான மூன்றாவது தளத்தில் இருந்தார். அவருக்கு அருகே ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஒன்று இருந்தது. எங்களைப் பார்த்ததும் அவர் குழப்பமாக காணப்பட்டார். நான் நினைத்ததை விட அவர். உயரமாக இருந்தார். அடுத்த நொடி நான் அவரை இரண்டுமுறை நெற்றியில் சுட்டேன். அவர். கிழே சரியும்போது திரும்ப ஒருமுறை சுட்டேன். அவர் அசையவில்லை. அவர் இறந்து விட்டார். அவருடைய நாக்கு வெளியே தள்ளி இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
கமாண்டோவின் மனைவி தெரிவிக்கும்போது 'அவர் நாட்டிற்காக நிறைய செய்துள்ளார். ஆனால் அவரைக் குப்பையில் வீசிவிட்டனர் என்று வேதனைப்பட்டார்.
இது தாண்டா உன் யா! அமெரிக்கி ,இப்படித்தான் அமெரிக்க வல்லூருகள் மத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் போது அரபிகள்(எல்லோரும் அல்ல) யா!அமெரிக்கி என்று குதூகளித்தார்கள்
ReplyDeleteஒசாமா இந்த அமெரிக்க மடையர்களால் கொல்லப்படவில்லை மாறாக 2005-2001 இந்த காலப்பகுதியில் உடலில் ஏற்ப்பட்ட ஏதோ கோளாறினால் தான் இறந்தார் .மத்திய கிழக்கில் ஏற்ப்பட்ட தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட நாடகம் .
ReplyDelete