வாழைச்சேனையில் பொலிஸ் நடமாடும் சேவை
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
பொலிஸ் சேவையை மக்களின் காலடிக்கு எடுத்துச் செல்லும் செயற்திட்டம் இம் முறை கிழக்கு மாகாணத்தில் நடை பெறவுள்ள தேசத்திற்கு மகுடம் எனும் வேலை திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பொலிஸ் நடமாடும் நிலைய வேலைத்திட்டத்தில் வாழைச்சேனை பொலீஸ் நிலைய மக்கள் தொடர்பால் பிரிவு, பலநிகழ்ச்சி திட்டங்களை உள்ளடக்கி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் இறுதி நிகழ்வு செவ்வாய் கிழமை 26.02.2013 மட்- ஜெயந்தியாய மட்-ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய பிரதான பிரதான மன்டபத்தில் வாழைச்சேனை பொலீஸ் நிலைய மக்கள் தொடர்பால் பிரிவு பொறுப்பதிகாரி யூ.எல் இமானுல்லாஹ் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலீஸ் மா அதிபர் திரு பூஜித் ஜயசுந்தர உள்ளீட்ட பொலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மத குருமார்கள் அதிபர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட பெருத் தொகையான பொது மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் 365 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் தென்னங் கண்றுகளும் போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு பொதிகளும் வழங்கி வைக்கப்படுவதனையும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெறுவதனையும் படங்களில் கானலாம்.
Post a Comment