யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இஸ்லாம் பாடம் ஆரம்பம் (படங்கள்)
(பா.சிகான்)
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் க. பொ.த. உயர் தர மாணவர்களுக்கு இஸ்லாம் பாடம் அக்கல்லூரி அதிபரினால் நேற்று மாலை கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் கிளிநொச்சி உலமா சபை தலைவர் ஏ.எம் அஸீஸ் மௌலவி ஹிராஅத் மற்றும் துஆ பிராத்தனையில் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த கல்லூரி அதிபரும் இஸ்லாம் பாட ஆசிரியருமான எம் முபாறக்,,
தற்போதைய காலகட்டத்தில் உயர்தர பாடத்தெரிவு,பாடத்தின் அடிப்படை விடயம் தொடர்பில் விளக்கமளித்ததுடன், மாணவர்களின் வேண்டுகோளின் படி மேற்படி பாடம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதேவேளை கடந்த ஒரு வருட காலமாக உயர்தர மாணவர்கள் இஸ்லாம் பாடத்தை தெரிவு செய்து கல்வி கற்று வந்த போதிலும் அவர்களுக்கென ஆசிரியர்கள் அப்பாடத்திற்கு இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இப்பாடநெறியை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.அதற்காக யாழ் கல்வி வலயத்துடன் இது குறித்து அறிவித்ததாகவும் ஆனால் இஸ்லாம் பாட பட்டதாரி ஒருவர் யாழ் மாவட்டத்தில் இல்லை என கறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.
Post a Comment