இந்தியாவில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஒருபக்கம் வரவேற்பு - மறுபக்கம் எதிர்ப்பு (படங்கள்)
இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று பகல் விமானம் மூலம் பீகார் மாநிலம் புத்த கயா வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்-மந்திரி நிதிஷ்குமார் மற்றும் மாநில மந்திரிகள், அதிகாரிகள் வரவேற்றனர்.
மாநில போலீசின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. ராஜபக்சேவுடன் மனைவி ஷிராந்தி ராஜபக்சே மற்றும் 70 பேர் கொண்ட குழுவும் வந்துள்ளது. வரவேற்பு முடிந்ததும் புத்த கயாவில் உள்ள மகாபோதி கோவிலில் ராஜபக்சே சாமி கும்பிடுகிறார்.
மதியம் அவருக்கு நிதிஷ்குமார் விருந்து அளிக்கிறார். ராஜபக்சேவை எதிர்த்து மகாபோதி கோவில் அருகே கம்யூனிஸ்ட்டு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராஜபக்சே இந்தியா வருவதற்கு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ம.தி.மு.க. சார்பில் டெல்லி யில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக வைகோ அறிவித்தார். இதற்காக ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரெயில் மற்றும் விமானம் மூலம் டெல்லி சென்றனர். சுமார் 1000 தொண்டர்கள் டெல்லியில் குவிந்தனர். அவர்கள் அனைவரும் இன்று காலையில் ஜந்தர்மந்தரில் திரண்டனர். 10 மணிக்கு வைகோ ஜந்தர் மந்தர் வந்தார். அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பேசி ஆர்ப்பாட்டம் செய்தார்.
Dogs are barking.
ReplyDeleteU r correct my dear, Y Dogs R Barking, Its when they see the devil, can u imagine what I mean by.
ReplyDeleteவீனா போன தமிழ் நாட்டுக்காரன். வைக்கல்ல படுத்த நாய் மாதிரித்தான் இன்தா தமிழ் நாட்டுக்காரன்ட கெட்ட வியாதி. தான் வாழவும் மாட்டான், இலங்கை தமிழன வாழவும் விடவும் மாட்டன். இதுதான் நிஜம். கேடுகெட்ட தமிழ் நாட்டு அண்ணன்.
ReplyDeleteதமிழ் நாட்டுக்காறனால இலங்கை தமிழனுக்கு நாசமே இல்லாமல் விடிவு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.