Header Ads



பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் மீது வழக்கு தாக்கல் செய்யாதது ஏன் - நீதிமன்றம் கேள்வி


பாபர் மசூதி இடிப்பு வழக்கில், சதிக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட அத்வானி மற்றும் 19 பேருக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய காலதாமதம் செய்தது ஏன் என சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் 07-02-2013 கேள்வி எழுப்பியுள்ளது. 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக, சதி செய்ததாக கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டிலிருந்து மட்டும் (ஐ.பி.சி., 120 பி) 21 பேரையும் விடுவித்து, சிறப்பு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. மற்ற பிரிவுகளின் கீழ் இவர்கள் மீதான விசாரணையை தொடரலாம் எனவும் சிறப்பு கோர்ட் தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி அலோக் குமார் சிங் தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் 90 நாட்களுக்குள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சி.பி.ஐ., காலதாமதமாக, 6 மாதங்களுக்குப்பிறகே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஏன் இவ்வளவு கால தாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்கிறீர்கள் என சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வக்கீல் ராவ், பல்வேறு தஸ்தாவேஜ்கள் இந்தியில் இருந்ததால் அதை மொழி பெயர்க்க தாமதமாகி விட்டதாக தெரிவித்தார். பின்னர் பேசிய நீதிபதிகள், சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், அதில் மாற்றங்கள் ஏதும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். மேலும், இன்றைய விசாரணையின் போது, மத்திய அரசின் சார்பில் ஆஜராக வேண்டிய அடிசனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எஸ். சண்டியாக் ஆஜராகவில்லை. இதை கண்டித்துள்ள சுப்ரீம் கோர்ட், அவர் இந்த வழக்கை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டாரா எனவும் கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.