கத்தாரிலிருந்து எமக்கு வந்த ஒரு மடல்...!
(லதீப் அஹ்மட் - கத்தார்)
அஸ்ஸலாமு அலைக்கும்..!
யாழ் முஸ்லிம் இணையத்தளமே உங்கள் வாசகர்களில் நானும் ஒருவன். கத்தாரில் உள்ள இலங்கையர்கள் அதிகம் விரும்பி படிக்கும் உங்கள் இணையம் குறித்து சிலர் பேஸ்புக் பக்கத்தில் தேவையற்ற விதண்டாவாத கருத்துக்களை எழுதியுள்ளதை கண்டு கவலையடைகிறேன்.
நடுநிலையான முஸ்லிம் ஊடகத்தின் அவசியம் உணரப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் ஊடகத்தின் தேவையை நிவர்த்தித்து செயற்படும் யாழ் முஸ்லிம் இணையத்திற்கெதிரான இந்த போலி பிரச்சாரங்கள் கத்தாரில் உள்ள இலங்கை முஸ்லிம்களாகிய எங்களை வியப்படைய வைத்துள்ளது.
றிசானாவிற்கு மரண தண்டனை விதித்தமைக்காக சவூதி அரேபியாவை யாழ் முஸ்லிம் இணையம் பழிவாங்க துடிப்பதாக கூறுவது சிறுபிள்ளை தனமானது. சரீஆ சட்டத்தை உங்கள் இணையம் ஒருபோதும் விமர்சித்தது கிடையாது. சிலவேளைகளில் சவூதிக்கு எதிரான விமர்சனங்கள் உங்கள் இணையத்தில் வந்திருக்கலாம். அதன் அர்த்தம் நீங்கள் சரீஆ சட்டத்தை விமர்சிப்பதாக அமைந்துவிடாது.
தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் யாழ் முஸ்லிம் இணையத்தை சிக்கவைக்க சிலர் திட்டமிட்டுள்ளனரோ என்று சிந்திக்கத்தோன்றுகிறது. அவர்களின் நடவடிக்கைகள் அவ்வாறுதான் அமைந்துளள்ன. முஸ்லிம் சமூகத்திற்காக துணிவுடன் குரல் கொடுக்கும் உங்கள் இணையத்தின் சேவைகள் தொடர்ந்து தேவை.
இதுபோன்ற சிலரின் மட்டகரமான விமர்சனத்திற்கும், சவூதி அரேபியாவிற்கு வால் பிடிக்கும் மற்றும் சிலருடைய செயற்பாட்டுக்கும் யாழ் முஸ்லிம் இணையம் அடிபணிந்துவிடகூடாது. கத்தாரில் உள்ள ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுடன் தமிழ் பேசும் இந்தியர்களும் உங்கள் இணையத்திற்கான ஆதரவை வெளிப்படுத்துகிறோம்.
இயக்க பித்துபிடித்து அலையும் சிலருடைய தீங்கிலிருந்து நீங்களும், உங்கள் இணையமும் பாதுகாப்பு பெற நாங்கள் இறைவனிடம் இருகரமேந்துகிறோம்..!
I too love this blog. நல்ல செய்திகள் உடனுக்குடன் கிடைக்கின்றன. வாசகர்களை கவரும் வகையில் செய்திகள் இருந்தாலும், கட்டுரை அமைப்பில் சில சொதப்பல்கள் உள்ளன. ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்ப ஒரே கட்டுரையில் மேலும் கீழும் போட்டு அரைப்பதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள். அது ஆசிரியரின் தொனி என்றாலும், சிலவேளை சலிப்பாக உள்ளது. மற்றப்படி நல்ல ப்ளாக். குறுகிய காலத்தில் நல்ல ரேங்க் கிடைத்துள்ளது. ஒரு related post வைக்கலாமே?
ReplyDelete