Header Ads



'முஸ்லிம்களின் அசமந்த போக்கு வேதனை தருகிறது'


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்திற்காக பிரேரணகைள் முன்வைக்கபடும் இறுதித் திகதி இம் மாதம் 15 ஆகும். இதனை விரைவாக முன் வைக்குமாறு சிறுபான்மையின சிவில் அமைப்புக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷ.

செவ்வி இக்பால் அலி

வடமேல் மாகாண சபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அமைப்பாளர் ரிஸ்வி ஜவஹர்ஷ உள்ளுராட்சித் தேர்தல் திருத்தச் சட்டம் மூலம் குறித்து வழங்கிய செவ்வி.

உள்ளுராட்சி சபைத்தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து உள்ளராட்சி மன்றத் தேர்தல் புதிய முறையில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் முறையானது முஸ்லிம்களது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள எந்தளவு தூரம் ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறுவீர்களா?

வடக்கு கிழக்கு வெளியே உள்ள சிறுபான்மை சமூகங்களின் பிராந்திய அரசியல் பிரதிநிதித்துவத்தை கடந்த காலங்களில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் ஊடாக பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் இந்த தேர்தல் முறையானது சிறுபான்மை சமூகத்திற்கு குறிப்பாக வடக்கு கிழக்கிற்கு வெளியே பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து வாழுகின்ற பிரதேசங்களிலே எமது பிரநிதித்துவங்களைப் பாதுகாப்பது என்பது மிகச் சிக்கலமான விடயமாகும் எனப் பார்க்கின்றேன். எவ்வாறாயினும் சாத்தியமற்ற ஒரு தேர்தல் முறையின் கீழ் எமது சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாப்பதற்கான சாதாகமான சூழ்நிலைகளை நாங்கள் தேடி நிற்கின்றோம்.

புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் வட்டாரத் தேர்தல் முறையின் கீழ் நூற்றுக்கு எழுபது விகிதம் என்ற அடிப்படையிலும்  நூற்றுக்கு முப்பது விகிதம் என்ற அடிப்படையிலும் பிரநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள். இவ்வட்டாரங்களை நிர்ணயம் செய்வதற்காக தேசிய மட்டத்திலே ஒரு தேசிய சபையும் அதே போன்று மாவட்ட சபைகளும் உருவாக்கப்பட்டள்ளன. இந்த சபைகள் ஒவ்வொரு பிரதேச எல்லைக்குள்ளும் வட்டாரங்களை நிர்ணயம் செய்வதற்காக பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களிடமிருந்து பிரேரணைகளைக் கோரி இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் தான் சிறுபான்மையின சமூகம் மிக நிதானமாக செயற்பட வேண்டிய ஒரு தருணமாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சிறுபான்மையின சமூகம் மற்றும் சமூக அமைப்புக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்.?

உள்ளுர் அதிகார சபைத் திருத்த தேர்தல் (திருத்தம்) சட்ட மூலத்தின் பிரிவு 3 (ஆ) 2 பிரிவு மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது இந்த வட்டாரங்களை பிரிக்கின்றபோது இனரீதியான அமைபப்பில் விகிதாரத்தைக் கருத்திற் கொண்டு அக்குறித்த ஒவ்வாரு இனப்பிரிவுக்கும் சமமான விகிதாசாரத்தை உறுதி செய்யும் விதத்தில் வட்டாரங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்ற போதும் வடக்கு கிழக்குக்கு வெளியிலே இருக்கின்ற உள்ளுராட்சி சபைகளுக்கான வட்டாரங்களை பிரிப்பதற்கான செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் அவ்வாறான குறித்த இனப்பிரிவுக்கான விகிதாசாரங்களைப் பேணி அவர்களுடைய அரசியல் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாப்பதற்கான எந்த ஏற்பாடும் இருப்பதாகத் தெரிய வில்லை. திட்டமிட்ட அடிப்படையில் சிறுபான்மை சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்வதற்கான உள்நோக்கத்துடன் இந்த வட்டாரப் பகிர்வை திட்டமிட்டு செய்து வருகின்றனர்.

எனவே சிறுபான்மை சமூகங்கள் சிவில் அமைப்புக்கள் இந்த சிறுபான்மைய இனப்பரம்பலின் அப்படையில் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்கின்ற அமைப்பிலே பிரேரணைகளை முன் வைக்க வேண்டும். இதற்கான இறுதித் திகதி எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி ஆகும் இதற்கு முன்னால் தங்களுடைய பிரேரணைகளை மாவட்ட சபைகளுக்கு அல்லது தேசிய சபைக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

மாவட்ட சபை அல்லது தேசிய சபை என்றால் என்ன அது எவ்வாறு செயற்படுகின்றது.?

இது அந்தக் குறித்த சட்ட மூலத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சபைகளாகும். ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்பிலே மாவட்ட சபைகள் அந்தந்த மாவட்டத்தின் பிரதான செயலகங்கள் இயங்குகின்றன. அதேபோன்று தேசிய சபை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சிலே செயற்படுகின்றது இந்தச் சபைகளுக்கு தங்களுடைய பிரேரணைகளை தங்களுடைய பிரேரணைகளை சமர்பிக்க வேண்டும்.

இந்த வட்டார எல்லைகள் எவ்வாறு நிர்ணயம் செய்கின்றார்கள் ?

ஒரு வட்டாரத்தில் வாக்காளர் எண்ணிக்கை அகக்குறைந்தது 4000 ஆக இருத்தல் வேண்டும். அதற்கு ஏற்றவகையில் கிரமாசேவகர் பிரிவு 3 அல்லது 4 கிகைகள் ஒன்றாக இணைந்து இந்த வட்டாரங்களை நிர்ணயம் செய்கின்றார்கள். இந்தச் சந்தர்ப்பத்திலே பெரும்பான்மை சமூகத்தின் சிவில் அமைப்புக்களும் அவர்களுடைய பிரேரணைகளில் முஸ்லிம்களின் பெரும்பான்மை வட்டாரங்களைத்  தடுக்கும் நோக்குடன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற கிராம சேவகர் பிரிவுகளை வேறுவேறாகப் பிரித்து பெரும்பான்மை கிராம சேவகர் பிரிவுகளுடன் இணைத்து வட்டாரங்களை பிரேரணைகளை சமர்ப்பித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் பிரதேச முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களும், சிவில் அமைப்புக்களும், பள்ளி நிர்வாகங்களும், மாவட்ட ஜம்மியதுல் உலமாக்களும் அசமந்தப் போக்கினையே இந்த விடயத்தில் உள்ளனர்.

இவ்வமைப்புக்கள் ஒன்றிணைந்து பிரதேச மட்டத்தில் கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் என்பன செய்து இருக்க வேண்டும். முஸ்லிம் அரசியலை பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பது நம் எல்லோரினதும் சமூகக் கடப்பாடாகும்.

இது தொடர்பாக நீங்கள் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டீர்கள்?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் தலைமையகத்தில் இதற்கான தனியான பிரிவினை உருவாக்கி இருக்கின்றது. அதன் தலைவராக சிரேஷட ஆய்வாளரான எம். ஐ. எம் மொஹிதீன் செயற்பட்டு வருகின்றார். நாங்கள் குருநாகல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 11 பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகள், மாநகர சபை ஆகியவற்றின் பிரேரணைகளை தயார் செய்திருக்கின்றோம். இது தொடர்பாக கட்சி உறுப்பினர்களை, அங்கத்தவர்களை தெளிவுபடுத்துகின்ற இரண்டு கூட்டங்கள் மாவட்ட மட்டத்தில் நடத்தி இருக்கின்றோம். அது மாத்திரமன்றி மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக பள்ளிவாசல்கள் ஏனைய சிவில் அமைப்புக்களுக்கும் அனுப்பி வைத்தோம். அவர்கள் அழைத்த சந்தர்ப்பத்தில் அந்தந்த பிரதேசங்களுக்கும் சென்று விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி இருக்கின்றோம். எனினும் முஸ்லிம்கள் அதிகமாக வாழுகின்ற சில பிரதேசங்கள் இது தொடர்பாக அத்தனை முயற்சிகளும் செய்தும் தொடர்ந்து இவர்கள் அசமந்தப் போக்கிலேயே செயற்படுவது வேதனை தருகின்றது. இந்த இறுதி சந்தர்ப்பத்திலாவது முடிந்தளவு விரைவாக இந்த விடயங்களை கவநத்திற் கொண்டு பிரேரணைகளை சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

நீங்கள் முழு மாவட்டத்திற்குமான பிரேரணைகளை முன்வைத்தாக கூறினீர்கள். எனினும் ஏன் சிவில் அமைப்புக்களும் பிரேரணைகளை முன் வைக்க வேண்டும் என்று கூறுகின்றீர்கள்.?

பல்வேறு தரப்பிபலிருந்தும் பல்வேறு விதமான பிரேரணைகள் முன் வைக்கப்படல் வேண்டும். அப்போதுதான் இது தொடர்பான அமர்வுகளிலே எங்களுக்கு கூடுதலான அழுத்தங்களை பிரயோகிக்க கூடியதாக இருக்கும். ஒரு தனி நபருடைய பிரேரணை மட்டும் எந்தவிதமான தாக்கத்தையும் உண்டு பண்ணாது.

முஸ்லிம்களின் பிரதிநிதித்துவதைப் பெற்றுக் கொள்வதற்காக வட்டாரங்களை நிர்ணயம் செய்து பிரேரணைகளை முன் வைக்கின்ற போது அடிப்படையாகக் கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன?

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிராம சேவகர் பிரிவு 3 அல்லது 4 இனை ஒன்றாக இணைத்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வட்டாரங்களை இணைக்கலாம். அவ்வாறு இணைக்கின்ற போது முஸ்லிம்களின் வாக்காளர் எண்ணிக்கை அக்குறித்த வட்டாரத்தில் 2500 – 3000 அளவில் இருப்பின் அது முஸ்லிம் பெரும்பான்மை வட்டாரமாக உருவாகும் அல்லது 1500 – 2000 இடைப்பட்ட வாக்காளர் இருப்பின் அதனைப் பல் உறுப்பு வட்டாரமாக பிரேரிக்கலாம். பல் உறுப்பு வட்டாரங்கள் என்பதும் இரு சமூகங்கள் சமமாக இருக்கின்ற போது இரண்டு  சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பில் இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களை ஒரு வட்டாரத்திலருந்து தெரிவு செய்யலாம். எங்களுக்கு மிகவும் சாதகமான அமைப்பாக முஸ்லிம் பெரும்பான்மையைக்  கொண்ட வட்டாரங்கள் அவசியமாகும் . எனினும் அதற்கு வாய்ப்பு இல்லாத போது குறைந்தது பல் உறுப்பு வட்டாரங்களையாவது பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.



No comments

Powered by Blogger.