பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதாக ஹக்கீம் கோஷம் போட்டது வாக்குகளை வேட்டையாடவா?
(எம்.ஏ.எம்.நிலாம்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமைத்துவமும் அரசுடன் சேர்ந்து முஸ்லிம் சமூகத்துக்கு துரோகமிழைக்கும் வகையில் செயற்பட்டுவருவதாக குற்றம் சுமத்தியிருக்கும் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸம்மில், நாட்டில் ஒருபள்ளிவாசலும் தாக்கப்படவில்லை என்ற அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிக்கையை ஆமோதிக்கும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதாக மேடை தோறும் கோஷம் போட்டது முஸ்லிம்களின் வாக்குகளை வேட்டையாடுவதற்குத்தானா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் வந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவிகளுக்காக அரசுடன் இணைந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தை தவறாக வழிநடத்துவதோடு, தனது இனத்தையே காட்டிக்கொடுத்து விட்டதாகவும் மாநகர முதல்வர் முஸம்மில் சுட்டிக்காட்டினார்.
வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்அலுவலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கொழும்பு மாநகர முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..
People never try to open their eyes so they will continue cheat
ReplyDelete