Header Ads



தமிழ்நாட்டில் இலங்கை வங்கி கிளை மீது தாக்குதல் - இருவர் காயம் (படம்)



தமிழ்நாட்டில்,சென்னை, எழும்பூரில் உள்ள இலங்கை வங்கிக் கிளை 07-02-2013 தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. 

எழும்பூரில் உள்ள இலங்கை வங்கி கிளைக்குள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழு, திடீரெனத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. 

இதன்போது இலங்கை வங்கியின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன.  இந்தத் தாக்குதலில் வங்கிப் பணியாளர்கள் இரண்டு பேர் பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

 மகிந்த ராஜபக்ச நாளை இந்தியா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.