முஸ்லிம்களுக்கு எதிரான சதிநாச செயற்திட்டம்..!
(அபூ அப்துல்லாஹ்)
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற ஹலால் விவகாரம் பாதுகாப்பு செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து “ஹலால் முஸ்லிம்களுக்கு மட்டுமானது” என்ற தீர்மானத்துடன் தொக்கி நிற்கின்றது. இந்த இடத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஹலால் விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்ற ஒரு கருத்தை இந்த இடத்தில் முன்வைக்கத் தோன்றுகின்றது.
நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல பொதுபலசேனா என்ற அமைப்பும் அவர்கள் முன்வைத்த கருத்துக்களும் அழுத்தங்களும் இயல்பானவை அல்ல அவை திட்டமிட்ட அடிப்படையில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகவே இருக்கின்றது. “Manufactured Entity” அதாவது சமகாலத்தில் அரசியல் உலகில் மாற்றங்களை ஏற்படுத்தவும், தாம் விரும்பிய நிகழ்ச்சிநிரலை அமுலாக்கம் செய்வதற்கும் இத்தகைய முறைமை பின்பற்றப்படுகின்றது. இதனை அமெரிக்க, இஸ்ரேலிய அரசியல் அமைப்புகள் உலகில் அறிமுகம் செய்தன, 9-11 தாக்குதல் இதற்கு ஒரு சிறப்பான உதாரணமாகும். முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு மனோநிலையினையும், முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்க அணி மேற்கொள்ளப்போகும் அழிவுநாச வேலைகளுக்கான மக்கள் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்காக குறித்த தாக்குதல் அமெரிக்க இஸ்ரேல் அமைப்புகளின் திட்டமிட்ட செயல் என்பதை உலகம் அறிந்துகொண்டுள்ளது.
இதேபோன்று இலங்கையில் முஸ்லிம்களை இலக்குவைத்து தொடங்கப்பட்டுள்ள அமைப்பே பொது பல சேனா என்னும் அமைப்பாகும். இது இலங்கை அரசாங்கத்தின் ஒரு செயற்திட்டம் என்பதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். அதனுடைய ஒரு அங்கமாகவே பாதுகாப்புச் செயலாளருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் அதனால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் அமைந்துள்ளன. எனவே இத்தகைய ஒரு திரிசங்கு நிலைக்குள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா போன்ற சமூகத்தை மார்க்க ரீதியாக வழிநடாத்துகின்ற சமூக அமைப்பு சிக்கிக்கொள்வது உகந்ததல்ல.
ஹலால் விவகாரத்தை முதன்மைப்படுத்தி முஸ்லிம் சமூகத்தை உணர்ச்சியூட்டி அவர்களை ஹலால் விவகாரத்தில் மூழ்கியிருக்கச் செய்துவிட்டு திரைக்குப் பின்னால் முஸ்லிம்களுக்கு எதிரான சதிநாச செயற்திட்டமொன்றினை அரசாங்கம் மேற்கொள்ளத் தயாராகின்றது என்பதை சமகால விவகாரங்களை உற்றுநோக்கும் எல்லோராலும் கண்டுகொள்ள முடியும்.
* முஸ்லிம்களின் கல்விச் செயற்பாடுகளை முடக்குதல்
* குறிப்பாக கொழும்பு நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள்,
* பள்ளிவாயல்களின் மீது பிரயோகிக்கப்படும் அச்சுறுத்தல்கள்
* முஸ்லிம் வர்த்தகர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள்
*முஸ்லிம் அமைப்புகள், இஸ்லாமிய இயக்கங்களின் மீது அமுலாக்கப்படுகின்ற வரையறைகள்
* முஸ்லிம்களின் நலன்களை மட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றில் மேற்கொள்ளப்படும் சட்டப்பிரோரனைகள்
* வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்த அரசின் பாராமுகம்
* கிழக்கின் முஸ்லிம்களின் காணிகள் இலக்குவைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
* ஹிஜாப், மற்றும் புர்க்காவின் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் கருத்துரீதியான தாக்குதல்கள்
போன்ற பல்வேறு விடயங்கள் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக அரச அனுசரணையுடன் இடம்பெறும் நடவடிக்கைகளாகும். இதன் தொடர்ச்சியில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளின் தொடக்கமாகவே இந்த நடவடிக்கைகளை நாம் அவதானிக்கின்றோம். இலங்கையின் பாதுகாப்பு பிரிவினர் நடாத்திய மிக நுணுக்கமான உளவு நடவடிக்கைகளின் மூலம் ஜம்இய்யதுல் உலமா சபையே முஸ்லிம்களின் பிரதான சமூகத் தலைமை அடையாளமாக உளவு அமைப்புகளினால் அடையாளப்படுத்தப்பட்டது. உலமா சபையுடன் மோதுவதற்கென தயாரிக்கப்பட்ட பொது பல சேனா அவர்களை உருவாக்கியவர்களின் முழுமையான அனுசரணையுடன் உலமா சபையுடன் மோதலைத் தொடங்கியது. ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களின் விளைவுகளால் பல்வேறு கருத்துக்களும் ஊகங்களும் செயற்பாடுகள் உருவாகின. இதனை அரச உளவுத்துறை நுணுக்கமாக அவதானித்தது.
இலங்கை முஸ்லிம் சமூகத்தில் குறிப்பிடுமளவிற்கு ஜிஹாத் அமைப்புகளோ அல்லது அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மூலக்கூறுகளையோ அவர்களால் அவதானிக்க முடியாது போயிற்று. எனவே முஸ்லிம்களை முழுமையாக ஒடுக்குவதில் அவர்களுக்கு எவ்வித சிரமங்களும் எதிர்காலத்தில் இருக்கப்போவதில்லை என்ற தீர்மானத்தை அவர்கள் எட்டினார்கள். அதன் ஒரு கட்டமே “முஸ்லிம்களுக்கு மாத்திரமான ஹலால்” என்னும் வரையறுக்கப்பட்ட தீர்வாகும். இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தில் முஸ்லிம் நுகர்வோர் பாரிய தாக்கத்தை செலுத்தப்போவதில்லை என்ற உண்மையை பெரும்பான்மை சமூகத்தின் உற்பத்தியாளர்களுக்கு உணர்த்தும் செயற்திட்டமாகவே இது அமைய இருக்கின்றது. வெளிநாட்டு ஏற்றுமதி விடயத்தில் அவர்கள் மலேசியா, மாலைதீவு, இந்தியா போன்ற நாடுகளின் ஹலால் சான்றிதழ்களைப் பயன்படுத்துவார்கள். இதன் மூலம் இலங்கை முஸ்லிம் சமூகத்தை அவர்களுடைய இடத்தில் வைத்தல் (Keep Them In Their Position) என்ற நடைமுறையை இலங்கை அரசு மிகவும் கச்சிதமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையானது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சதிநடாகத்தில் தனது வகிபாகம் எதுவென்று அறியாத நிலையில் நடித்துள்ளமையினை எம்மால் காண முடிகின்றது. சமூகத்தை அமைதியாக இருக்கக் கோருவது தாம் எடுத்த தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கான கால அவகாசத்தை எடுத்துக்கொள்வதற்காக இருப்பின் அது சிறப்பானதல்ல, மாற்றமாக சமூகம் மிகவும் சிறப்பான வழிமுறைகளின்பால் வழிநடாத்தப்படவேண்டும்.
ஹலால் சான்றிதழ் வழங்கும் விவகாரம் அல்லாஹ்வுடைய நியதிகளுக்கு அப்பால் சென்று மேற்கொள்ளப்பட்ட ஒரு செயன்முறை என்ற கருத்தை ஒரு சில மூத்த உலமாக்கள் வலியுறுத்துகின்றார்கள். அதாவது “ஹாலால் தெளிவானது, ஹறாமும் தெளிவானது இடையில் ஐயத்துக்கி இடம்பாடான விடயங்கள் இருக்கின்றன நல்லோர் அவற்றைத் தவிர்ந்துகொள்ளட்டும்” என்ற ஒரு ஹதீஸ் இருக்கின்றது. அதன்பிரகாரம் ஹலால் மக்களுக்கு மிகவும் தெளிவாக அறியக்கூடியதாக இருக்கின்றது. இடையில் ஐயத்துக்கு இடம்பாடான விடயங்கள் இருக்கின்றன அவற்றை மக்கள் தாமாக தீர்மானித்து அவற்றிலிருந்து தவிர்ந்துகொள்ளட்டும். என்ற வழிகாட்டலில் ஹலால் சான்றிதழ்கள் பெரும்பாலும் ஐயத்துக்கு இடம்பாடான விடயங்களிலேயே தேவைப்படுகின்றது. மக்களின் சுயாதீனமாக ஹலாலைத் தீர்மானிக்கும் விடயத்தை உலமா சபை எடுத்துக்கொண்டுள்ளது. இது குறித்து முஸ்லிம்கள் தமக்குள் கருத்துத்தெளிவொன்றினை ஏற்படுத்த வேண்டும்.
ஹலால் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் தோன்றிய அசாதாரண நிலைமைகளின் போது அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை போன்ற மார்க்கத் தலைவர்களின் சபையானது தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக அரசியல் வாதிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தது, அது மார்க்கத் தலைவர்களை அணுகி இந்தப் பிரச்சினை குறித்துப் பேசி அவர்களின் கருத்துக்களை அறிய முற்படவில்லை அத்துடன் மதரீதியான தலைமைத்துவங்களை இந்தப்பிரச்சினையில் இணைத்துக்கொள்ளவில்லை இதன்மூலம் ஒன்றுக்கும் உதவாத சுயநலத்திட்டங்களை அமுலாக்குகின்ற சதித்திட்டங்களை மேற்கொள்கின்ற அரசியல்வாதிகளிடம் உலமா அமைப்பு சோரம் போய்விட்டது என்றே எண்ணத் தோன்றுகின்றது.
எனவே இவ்வாறான சிக்கல்கள் நிறைந்த ஒரு சூழலில் ஜம் இய்யதுல் உலமா தனது சரியான நிலையினை உணர்ந்து சதிவலைகளில் சிக்கிக்கொள்ளாமல் ஒதுங்கிக்கொள்வதும், முஸ்லிம் சமூகத்தில் நேர்மையாக சிந்திக்கின்ற செயலாற்றுகின்ற புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்களை முதன்மைப்படுத்தி இத்தகைய விவகாரங்களை கையாள்வதும் சிறப்பானதாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்
plz avoid to write & talk in this way ,it is enough for us divide our umamth by wahabi,salafi,tawheed ,jamathe eslami ,tareeka etc..Don’t dived us let it SL Muslim under the umbrella of ACJU whatever they took step we support them it can be success or fail but our leaders are ACJU.i feel abu abdula also indirectly supporting to BBS becouse he knows every Group of Muslim quite excepet ACJU So He try to came out this Group and give thair ideas and each Muslim will fight each other command.don’t commend any one about Islamic issue or Halal Issue let it solve ACJU and suport to them only ,this is the time for our unity
ReplyDeleteஅன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
இஸ்லாமிய வரலாற்றைஆராய்ந்து பார்த்தால் அங்கே இஸ்லாமிய அறிஞர்கள்
பட்ட துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் .ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் ஒதுங்கி ஓடவில்லை .எதிர்ப்புக்களை அறிவுபூர்வமாக எதிர்கொண்டே வந்துள்ளார்கள் .
அந்த வகையில் நம் நாட்டை பொருத்தவரை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது .யாரும் சுவனத்தை இலகுவாக அடைந்து கொள்ள முடியாது .மேலும் தற்போது நம் நாட்டு முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு அல்குர் ஆன் ,அல்ஹதீஸ் அடிப்படையில் முடிவுகள் எட்டப்பட்டுக்கொடிருப்பது அல்லாஹ்வின் அருளாகவே காணப்படுகின்றது .
இனிவரும் காலங்களிலும் இதே தலைமைத்துவத்துடன் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும் என்று இறைவனிடபிரார்ம் த்திக்கின்றேன்
Excellent opinion!!!. This is the work of this government. The government's response to Muslim's problems clearly shows that Mahinda regime is behind this BBS. Why should we go behind this government anymore??? This is the right time to think about this? Also we can identify hypcrites in our community at this situation.
ReplyDeletemini minhaj you are right....
ReplyDeleteஇலங்கை முஸ்லிம் உம்மத் கருத்துரீதியான விமர்சனங்களை அல்லது வேறுபாடுகளை பிரிவினைவாதம் என்று அடையாளப்படுத்துகின்றனர். இது முதலில் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். ஏனெனில் சமூகத்தின் ஆரோக்கியமான தன்மையானது கருத்துவேறுபாடுகளைக் கொண்டு உறுதிசெய்யப்படுகின்றது என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். ஆலிம்களும் மனிதர்களே, அவர்களும் தவறுகள் செய்யக்கூடியவர்கள், அறியாமல் அல்லது ஒரு குறித்த விடயம்குறித்த போதிய அறிவு இல்லாமல் இருக்கக்கூடியவர்களே, எனவே கருத்துகளைக் முன்வைக்கும்போது அவர்களுக்கும் மக்களுக்கும் தெளிவு பிறக்கும். இலங்கை முஸ்லிம் உம்மத் இந்த நாட்டில் அவர்களது நோக்கம் என்ன அவர்களது பணி என்ன என்று இதுவரை சரிவர அடையாளம் செய்யவில்லை. ஒவ்வொரு இயக்கமும் அவர்களுக்கென்று தனியான கொள்கைகளையும், வழிகாட்டல்களையும் முன்வைக்கின்றனர். அவை இந்த நாட்டிற்கு உரியதா அல்லது பொறுத்தமானதா என்பதில் அவர்களுக்கு இன்னமும் சரியான தீர்க்கமான முடிவுகள் கிடையாது. எனவே முரண்பாடுகள் தோன்றுகின்றன. ஒவ்வொருவரும் வித்தியாசமான நிகழ்ச்சி நிரல்களில் உழைக்கின்றனர். ஆனால் ஜம் இய்யதுல் உலமா போன்ற அமைப்பானது எல்லோரையும் ஒன்றிணைக்கின்ற ஒரு அமைப்பாக இருக்கின்றது. எனவே அது முதன்மையாக இந்த தேசத்தில் முஸ்லிம்கள் எதற்காக வாழவேண்டும், முஸ்லிம் உம்மத் இந்த தேசத்தில் எதனை நிறைவேற்ற வேண்டும், அவர்களுக்கான பணி என்ன என்று சரியாக அடையாளம் காணவேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள ஆக்கம் ஜம் இய்யதுல் உலமாவை நடுநிலையாக நின்று விமர்சனத்துக்கு உட்படுத்தியிருக்கின்றது. விமர்சனங்களைத்தாண்டிய அமைப்பு அல்லது விமர்சனங்களை அங்கீகரிக்காத அமைப்பு சிறப்பான சமூக அமைப்பாக இருக்க முடியாது. விமர்சனங்கள் எழாத அமைப்பாக இருப்பதனால் எமது அமைப்பை பலமான அமைப்பு என அந்நியர்கள் கருதிவிடமாட்டார்கள், விமர்சனங்களை அங்கீகரிக்கின்ற முதிர்ச்சியுள்ள அமைப்பாக இருக்கின்றபோதுதான் அது உண்மையிலேயே பலமான அமைப்பு என்ற கருதுகோல் மிகவும் பொதுவானது. அந்த வகையில் மேலே பகிரப்பட்டுள்ள கருத்துகள் மிகவும் ஆழமானவை என்பது மட்டுமல்ல விவாதத்திற்கு உட்படுத்தப்படவேண்டியவை என்பது புலப்படுகின்றது. வஸ்ஸலாம். அஸ்மின் அய்யூப்
ReplyDelete