ஆசிரியர்களின் நேரம்பிந்திய வரவு - மாணவர்களின் கல்வி பாதிப்பு
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மொறவௌ பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் காலதாமத வரவினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாடசாலை காலை 7.45 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டும் சில ஆசிரியர்கள் தொடர்ச்சியாக காலதாமதமாகியே வருகின்றனர்.து_ர இடங்களான திருகோணமலையிலிருந்து வரும் ஆசிரியர்களின் விபரங்களையும்,கிராமத்தில் கல்வி கற்பிக்கின்றவர்களையும் ஆய்வு செய்த வேளை து_ர இடங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் 15 நிமிடங்களே தாமதமாகின்றனர்.
அக்கிராமங்களில் வசித்து வரும் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி விடயத்தில் அக்கறை காட்டுவதில்லை என்பது வரவு தாமதங்களின் மூலம் தெரியவருகின்றது.
வலயக்கல்வி அதிகாரிகள்,பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களின் விடயத்தில் மாணவர்களின் நலன் கருதி செயற்படவேண்டும். நிர்வாக சீர்கேடு வரும் என்பதற்காக தாமதமாகி வரும் ஆசிரியருக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாணவர்களின் கல்வி நடவடிக்கையே பாதிக்கப்படும் எனவும் புத்திஐPவிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே இனிவரும் காலங்களில் மாணவர்களின் கல்வி விடயத்தில் அக்கறையுடன் செயற்படுமாறு மொறவௌ பகுதி மாணவர்களின்; பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளையும், சம்மந்தப்பட்டவர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கிராமபுரத்தில் காணப்படுகின்ற பாடசாலை என நினைத்துக்கொண்டு ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலைக்கு அணிய வேண்டிய மரியாதையான உடைகள் (பாதணி,சீருடை,கலுத்துப்பட்டி) விடயத்தில் அக்கறையுடன் செயற்படவேண்டும்.
மாணவர்களின் கல்வி விடயம்,ஒழுக்க நெறிமுறைகளையும் கற்பிக்க வேண்டிய ஆசான்கள் காலதாமதமாகி வருவதினால் மாணவர்களை சீர் திருத்த முடியாத நிலை ஏற்படும்.ஆசிரியர்களின் குறைபாடுகளை நேரடியாக சொல்ல முடியாமல் தயங்கும் பெற்றோர்கள் யாரிடம் கூறுவது பற்றியும் தெரியாமல் தயங்குவதையும், பாடசாலை காலை நேரங்களில் சென்றால் அவதானிக்க முடியும்.
Post a Comment