மடவளையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி
(ஜே.எம்.ஹபீஸ்)
இனம் தெரியாதவர்களால் மடவளையில் பல இடங்களிலும் போடப்பட்டிருந்த ஒரு சுவரொட்டியை மேலே காணலாம். சிங்கள மொழியில் போடப்பட்ட இச்சுவரொட்டியை மேலோட்டமாக வாசித்தால் பின்வரும் நேரடிக் கருத்தைப் பெறலாம். சகல உயிர்களும் நலமாக வாழட்டும். மிருகப் பலிக்கு நாம் எதிரானவர்கள், இருப்பினும் பௌத்த மதகுருவே நாம் இனவாதத்திற்கும் எதிரானவர்கள் புத்தர் போதனையைப் பின் பற்றுவோம்' என்ற கருத்தைக் கொள்ளமுடியும். (மதகுருவை எச்சரிப்பது போல் உள்ளது)
ஆனால் சிவப்பில் எழுதப்பட்டுள்ளதை தனியாகவும் கறுப்பில் எழுதப்பட்டுள்ளதை தனியாகவும் வாசித்தால் வேறு ஒரு அர்த்தம் வருகிறது.
அதாவது, 'சகல உயிர்களும் நோய் நொடியின்றி வாழட்டும் இருப்பினும் மதகுருவே பௌத்த தர்மப்படி வாழ்வோம் மிருக பலியை எதிர்ப்போம் இனவாதத்தை ஒழிப்போம்.' என்பதாகும்.
(சகல உயிர்கள் என்று புத்தர் கூறியதில் இருந்து இனவாதிகளாகக் கருதம் அடிப்படைவாதிகளை நீக்கியுள்ளனர்) இதை சுருங்கக் கூறின் மேலோட்டமாக வாசித்தால் எமக்கு சார்பாகவும் எழுதிய மாதரி உள்ளது.
வரிவிட்டு வாசித்தால் எமக்கு எதிராகவும் பௌத்த கருத்தை ஆணித்தரமாகவும் உறுதி செய்வதாக உள்ளது போல் தெரிகிறது. மொழி ஆற்றல் கொண்டவர்கள் இதைவிட தெளிவாக விளங்க முடியும்.
Post a Comment