முஸ்லிம்களுடன் நற்பாகவும், பண்பாகவும் பழகுகிறேன் - சிவில் பொலிஸ் பணிப்பாளர்
(அஸ்ரப் ஏ. சமத்)
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் டாம் வீதியில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பிரதேசத்தின் சிவில் ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிவைக்கப்ப்பட்டது.
இங்கு உரையாற்றிய சிவில் பொலிஸ் பணிப்பாளர் முஜித்த புசல்ல,
இந்த நாட்டில் மிகவும் பழமைவாய்ந்ததொரு பெரிய பள்ளிவசாலில் சகல சமுகத்தின் மதத்தலைவர்கள் மற்றும் இப்பிரதேசத்தில் வாழும் சமுகங்களின் அங்கத்தவர்களை அழைத்து இவ்வாறனதொரு நிகழ்வு வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும். இங்கு கற்கும் மத்ரசா மாணவர்கள் பைத்துச் சொல்லி எங்களை வரவேற்றார்கள். இந்நிகழ்வு எனக்கு முதலாவது நிகழ்வாகும் நான் முஸ்லிம்களுடன் மிகவும் நற்பாகவும் பண்பாகவும் பழகி வருகின்றேன். எனது பாடசாலையில்கூட முஸ்லீம் நண்பர்கள் நிறையப்பேர் என்னுடன் படித்தார்கள்.
சகல மத ஸ்தாணங்களிலும் இந்த நாட்டில் வாழும் சகல சமுகத்தவர்களும் இணைந்து இவ்வாறனதொரு நிகழ்வுகள் நடைபெற்றால் மதங்களுக்கிடையில் ஐக்கியம் நிலைபெறும் எனவும் கூறினார்.
இந்நிகழ்வு பொலிஸ் ஆலோசனைக் சங்கத்தின் தலைவர் ஐ. அக்மத் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக பொலிஸ் சிவில் ஆலோசனைப்பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முஜித்த புசல்ல அவர்களுகம் கொழும்புப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த சிறிவர்த்தன உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயரத்தின மனம்பேரி பெரிய பள்ளிவாசல் மௌலவி தஸ்லீம் ஆகியோரும் கலந்த கொண்டு முவினத்தினைச் சேர்ந்த பொலிஸ் சிவில் ஆலோசனைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வைக்கப்பட்டது.
Post a Comment