மகிந்தவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான ஜனநாயகப் புரட்சியை ஆரம்பித்துள்ளோம் - ரணில்
மகிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான ஜனநாயகப் புரட்சியை நாம் ஆரம்பித்திருக்கின்றோம். பன்முகத்தன்மை கொண்ட பல கட்சிகளின் அமைப்பினூடாக இந்தப் புரட்சிக்கு வித்திடப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை மாலை எதிர்க்கட்சியின் எதிர்ப்பு அமைப்பின் போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார். நாட்டைப் பாதுகாப்பதற்காக அனைத்து மக்களையும் இந்த எதிர்ப்பு அணியில் ஒன்றுபடுமாறும் ரணில் அழைப்பு விடுத்தார்.
திங்கட்கிழமை மாலை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் 11 கட்சிகள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு அணியின் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வைபவம் இடம்பெற்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜக் கட்சி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி, மவ்பிம ஜனதாக் கட்சி, நவசிஹல உறுமய, றுஹுனு மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி ஆகிய பத்து அரசியல் கட்சிகளும் சுதந்திரத்துக்கான மேடை அமைப்பும் இணைந்துள்ளன.
Post a Comment