இலங்கை வீரர்கள் தமிழகத்திற்கு வரக்கூடாது - ஜெயலலிதா
இலங்கை நாட்டு வீரர்கள் தமிழகத்திற்கு வந்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் ஆசிய தடகள போட்டியை நடந்த முடியாது என்றும் வேறு எங்காவது நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் ஆசிய தடகள போட்டி நடத்தும் அமைப்பு மற்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் எவ்வித பதிலும் இல்லை என்றும், மத்திய அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து வருகிறது என்றும் ஜெ., கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பேரவையில் தீர்மானம் : எனது தலைமையிலான அரசு இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகளை சென்னையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திடமுடிவு எடுத்திருந்தது. விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே சமயத்தில், இலங்கைவாழ் தமிழர்கள் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும்,கவுரவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் உறுதியாக உள்ளது
கால்பந்து வீரர்களுக்கு எதிர்ப்பு : இது மட்டுமல்லாமல், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பாரதப் பிரதமருக்கு பல கடிதங்களை நான் எழுதியுள்ளேன். இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள கடந்த ஆண்டு தமிழகம் வந்தனர். அப்போது அவர்களுக்கு தமிழகம் வர அனுமதி அளித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை நான் தெரிவித்ததோடு, இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்தப் போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்று நான் உத்தரவிட்டேன்.
இதனால் வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் ஆசிய தடகளப்போட்டி நடக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Post a Comment