Header Ads



கற்பிட்டி முஸ்லிம், தமிழ் மீனவர்களுக்கு அநீதி..!


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கற்பிட்டி கடல் பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் சிறுபான்மை முஸ்லிம்,தமிழ் மீனவர்கள் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதாகவும்,ஏனைய மாவட்ட மீனவர்கள் அனைத்து அனுமதிகளும் வழங்கபப்பட்ட நிலையில் கடற்றொழிலில் ஈடுபடுவதாகவும்,இப்பிரதேச மீனவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி இதுவென்றும் அதனை  வன்மையாக கண்டித்துள்ள வடமேல் மாகாண சபையின் முன்னால் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ்,இது குறித்து கடற்றொழில் அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியேற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கற்பிட்டி சின்னக்குடியிறுப்பு பகுதியில் கற்பிட்டி மீனவ சங்கப் பிரதி நிதிகளுடன் இடம் பெற்ற சந்திப்பு குறித்தும்,அம்மீனவர்களுக்கு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் ஏற்படுத்தப்பட்டு வரும் இடையூறுகள் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த சில மாதங்களாக கற்பிட்டி மீனவர்கள் பெரும் தமது தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.இப்பிரதேச மீனவர்களால் பயன்படுத்தப்படும் மீன் பிடி வலைகள் தடை செய்யப்பட்டவை எனவும்,அதனை கொண்டு மீன்பிடிப்பவர்களை கைது செய்வதுடன்,அவர்களது பெருமைதியான வலைகளும் பறிமுதல் செய்யப்படும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றதாக சுட்டிக்காட்டியுள்ள முன்னால் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ்,இவ்வாறான வலைகளை கொண்டு நாட்டின் ஏனைய  பிரதேச மீனவர்கள் கடற்றொழிலை செய்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடை முறையினால் கற்பிட்டி மீனவர்களின் வருமானம் மிகவும் பாதிப்படைந்துள்ளதுடன்,சந்தைக்கு வரும் மீன்களின் தொகை மிகவும் குறைந்து காணப்படுவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.அதே வேளை இந்திய இழுவைப் படகுகளின்  அத்து மீறல்களும் அவ்வப் போது இடம் பெறுவதால்,ஆழ்கடல் மீன் பிடித்தல் பாதிப்படைந்துள்ளதுடன்,கடலின் இயற்கை வளங்களும் அவர்களினால் துவம்சம் செய்யப்படுவதாகவும்,இது குறித்து கடற்றொழில் நீரியள் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்து தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர்  கூறினார்.

அதே வேளை புதிதாக கடற்றொழில் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட சரத் குணவர்தன அண்மையில் பத்தலங்குண்டுவுக்கு விஜயம் செய்து அங்கு தங்கியுள்ள தென் பகுதி மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து மட்டும் ஆராய்ந்துள்ளார்.இந்த தகவல் கேள்வியுற்ற கற்பிட்டி பிரதேச மீனவர்கள் கற்பிட்டியில் வைத்து பிரதி அமைச்சரை வழி மறித்து தமது விசனத்தை தெரிவித்தமை குறித்தும் வடமேல் மாகாண சபையின் முன்னால் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ்,கடற்றொழில் அமைச்சரை நேரில் சந்தித்து இவ்விடயம் குறித்து கலந்துரைாயாடவுள்ளார்.

No comments

Powered by Blogger.