Header Ads



கல்முனை அல் அஷ்ஹர் வித்தியாலய மாணவன் கால் தடுக்கி விழுந்து மரணம்


கல்முனைக்குடி ஸாஹிபு வீதியைச் சேர்ந்த ஏ.எஸ்.ஸஹரான் அஹமட் (வயது 11) என்ற மாணவன் கால் தடுக்கி விழுந்து மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

கல்முனை அல் அஷ்ஹர் வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் இம்மாணவன் கல்வி கற்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த முதலாம் திகதி இவர் பாடசாலையில் இடைவேளை நேரத்தில் கால் தடுக்கி விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த அடிபட்டுள்ளது.

உடனடியாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இம்மாணவன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மரண விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

1 comment:

  1. இன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்

    ReplyDelete

Powered by Blogger.