இலங்கை முஸ்லிம்களுக்கு பாதகமான சட்டம் நாளை பாராளுமன்றத்திற்கு வருகிறது
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுப்பது தொடர்பான சட்டமூலம் நாளை புதன்கிழமை பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சட்டம் முஸ்லிம்களுக்கு பாதகமாக அமையுமென சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தமனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரகாரம் இந்த சட்டமூலம் இலங்கையில் அமுல்படுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுப்பது மீதான சமவாய திருத்த சட்டமூலம் மீதான விவாதம் நாளை நடைபெற உள்ளது. இந்த சட்டமூலத்தின் பிரகாரம் ஐ. நா. வினால் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
சட்டவிரோதமாகவோ விருப்பத்தின் பேரிலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதும் நபர் பயங்கரவாத அமைப்பொன்றிற்கு பொருளாதார ரீதியில் உதவுவது இந்த சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத அமைப்புசார் பட்டியலில் எல். ரி. ரி. ஈ. அல்- குவைதா, தலிபான் அடங்கலான பல அமைப்புகள் உள்ளதோடு, அவற்றின் பட்டியல் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட உள்ளன.
எமது முன்னைய செய்தி
தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை 03-02-2013 நடத்தியது. அந்தச் சந்திப்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டது.
அந்த சந்திப்பின்போது பேசிய ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.எம். சுஹைர், அவர்கள், தலிபான்கள் மற்றும் அல்கைதாவுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் உத்தேச தடையை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
இப்படியான தடைச் சட்டங்களைப் பயன்படுத்தி சிறுபான்மையினரான முஸ்லிம்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுடன், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருப்பதாகக் கூறிய சுஹைர் அவர்கள், இந்தச் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் பட்சத்தில், அது இவர்களுக்கு பாதகமாக அமையலாம் என்றும் இவை குறித்து தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
advice from bodu balasena-practical from government-they are chair holders.progect makers and practical workers -they have good team work
ReplyDeleteஇப்போது நாங்கள் கேட்டுக்கொன்டு இருப்பது ...உண்மையா ??பொய்யா ???என்று எங்களுக்கே .. தெரியவில்லை ....அரசாங்கம் சொல்கிறது இலங்கை படை யை ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா போகச்சொன்ன்னதாகவும் ...அரசாங்கம் மறுத்ததால் அமெரிக்க இன்று பாழி வாங்குகிறதாம் ... ஆனால் அரசாங்க ஊடகப்பேச்சாளர் சொல்கிறார் ...அப்படி அவர்கள் கேற்கவும் இல்லை நாங்கள் சொல்லவும் .இல்லை ..என்கிறார் ..இதற்கிடையில் அடுத்த கதையை நன்றாக கேளுங்கள் .....LTTE கடைசி யுத்தத்தின் போது ஒரு யுத்த கப்பலை அமெரிக்கா அனுப்பி LTTE போராளிகள் அனைவரையும் ..... ஆப்கான் செல்ல அமேரிக்கா பணித்ததாகவும் ..ஆனால் LTTE மறுப்புத்தெரிவித்து .....எங்களைப்போன்ற தலிபான் போராளிகளுக்கு நாங்கள் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டோம் ...மானத்தோடு மடிவோம் என்று சொன்னதாகவும் கதை அடிபடுகிறது ...இதில் எது சரி ... எது பிழை ..என்று எல்லோருமே குழம்பி நிக்கிறோம்
ReplyDelete