Header Ads



முஸ்லிம்களை பாதிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது


பயங்கரவாதிகளுக்கு அல்லது பயங்கரவாத அமைப்பிற்கு பணம் அல்லது பொருள் உதவிகள் வழங்குவதனை தடுக்கும் வகையில் புதிய சட்டம் திருத்த மசோதா சற்றுமுன் 08-02-2013 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவிகளை வழங்குவது தடை செய்யும் முகமாக இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பயங்கரவாத அமைப்புக்களுக்கு அல்லது பயங்கரவாதிகளுக்கு நிதி உதவிகளை வழங்குவோர் பயங்கரவாதிகளாகவே கருதப்பட வேண்டுமென இச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது முன்னைய செய்தி

தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை 03-02-2013 நடத்தியது. அந்தச் சந்திப்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டது.

அந்த சந்திப்பின்போது பேசிய ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.எம். சுஹைர், அவர்கள், தலிபான்கள் மற்றும் அல்கைதாவுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் உத்தேச தடையை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். 

இப்படியான தடைச் சட்டங்களைப் பயன்படுத்தி சிறுபான்மையினரான முஸ்லிம்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுடன், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருப்பதாகக் கூறிய சுஹைர் அவர்கள், இந்தச் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் பட்சத்தில், அது இவர்களுக்கு பாதகமாக அமையலாம் என்றும் இவை குறித்து தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2 comments:

  1. சும்மா பொய்க்கு தூக்கி உள்ளே போடுவதற்கான நிலையை உருவாக்கலாம் நமது ஜனநாயக? உரிமைகளை கோரி ஆர்ப்பாட்டம் ஊர்வலங்கள் நடத்தும் உரிமையும் இதன்மூலம் மறுக்கப்படலாம்.அல்லாஹ் ஒருவன்தான் நம்மை பாதுக்காக்கவேண்டும்...இலங்கை முஸ்லிம்களின் மீதான யூத நாசராநிகளின் சதி வலைகளில் அவர்களை திருப்தி படுத்த இந்த அரசு இறங்கி வரும் என்றுநாம் எண்ணவில்லை அல்லாஹ் போதுமானவன்..

    ReplyDelete

Powered by Blogger.