Header Ads



கண்டிக்கு ஓடிச்சென்ற ரவூப் ஹக்கீம் (படங்கள்)



(ஜே.எம்.ஹபீஸ்)

நீண்ட இடை வெளிக்குப்பின் மத்திய மாகாண முஸ்லிம்களுக்கு உதவிக் கரம் நீட்ட அமைச்சர் றவூப் ஹகீம் கண்டிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண காரியாலயம் ஒன்றும் கண்டியில் திறந்து வைக்கப்பட்டது. மத்திய மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் ஒன்று நடைபெறலாம் என்று பொது மக்கள் எதிர் பாhத்துக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் தனது ஆரம்பகால அரசியல் அரங்கான கண்டிக்கு ஓடோடி வந்தமை குறித்து கண்டி முஸ்லிம்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்ததைக் காண முடிந்தது.

அமைச்சர் தனது வேலைச் சுமைகளுக்கு மத்தியிலும் மாதத்தில் ஒரு தினத்தை தனது தொகுதிமக்களுக்கு ஒதுக்கியுள்ளமை ஆதரவாளர்களுக்கு மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

(2.2.2013) அமைச்சர் றவுப் ஹகீம் இன்று  கண்டிக்கு விஜயம் செய்து கட்டுகாஸ்தோட்டை வீதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாணக் காரியலாயத்தை திறந்து வைத்து அங்கு உரையாற்றினார். அங்கு இன மத பேதமின்றி மூவின மக்களையும் காண முடிந்தது. அமைச்சர் அங்கு தெரிவித்ததாவது,

இன்று அரசியல் ரீதியாகவும் சமய ரீதியாகவும் முஸ்லிம்கள் சவால்களை எதிர் கொண்டு வருவதாகக் கூறப்பட்டாலும் இன்னும் தேசிய நீரோட்டத்தில் எமது பயணம் காத்திரமாகவே உள்ளது. சட்டக் கல்லூரி அனுமதி தொடர்பான ஒரு சர்ச்சை ஏற்பட்டிருந்தது. ஆனால் அது தீர்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையுடன் சிலர் என்னைத் தொடர்புபடுத்த முயற்சித்தனர். இதற்கும் எனக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. அது சுயாதீனமான ஒரு நிறுவனமமாகும். எனது தலையீடு எதுவம் அங்கு ஏற்படுத்தப்படவில்லை.

அதே போல் கடந்த வாரத்தில் நீதி அமைச்சில் உயர் பதவிகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவையும் அரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் சட்டவிதிகள், பாராளுமன்ற சம்பிரதாயம் போன்ற அனைத்து அம்சங்களும் கவனத்தில் எடுக்கப்பட்டு அதன் பிறகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்மாற்றங்களால் பொதுமக்களுக்கு அணுகூலங்களே அதிகரிக்ககும்.

கண்டி வாக்காளர்கள் மற்றும் மத்திய மாகாண ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களது தேவைகளைக் கவனிப்பதற்கு முன்னர் கம்பலையில் ஒரு காரியாலயம் அமைக்கப்பட்டிருந்தது. இது எல்லோருக்கும் பொதுவான ஒரு இடத்தில் இல்லை என்ற ஒரு மனக்கவலையும் பலர் இடத்தில் இருந்தது. எனவே எல்லோருக்கும் பொதுவான கண்டி நகரின் பிரதான வீதியில் புதிதாக எமது காரியாலயம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதி மாதம் தோரும் மூன்றாவது வெள்ளிக் கிழமையை பொதுமக்கள் தினமாக ஒதுக்கி கண்டிக் காரியாலயத்திற்கு வருகை தர ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தமது தேவைகளுக்காக மாதா மாதம் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் கண்டிக் காரியாலயத்தில் என்னை சந்திக்க முடியும் என்றார்.

அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளாரும் முன்னால் மத்திய மாகாண சபை அங்கத்தவருமான ஏ.எம்.நயீமுல்லாஹ் அமைச்சரின் ஊடகச் செயலாளர் வைத்திய கலாநிதி ஏ. ரவூப் அப்துல் ஹபீஸ் உற்பட இன்னும் பலர் இவ்வவைபவத்தில் கலந்து கொண்டனர்.
அண்மையில் புதிததாக அரச நியமனம் பெற்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் பட்டதாரிகள் பலரும் அமைச்சரை சந்தித்து தமது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொண்டனர்.







1 comment:

  1. KADAISIYAAGA KANDI MAAVADDAMAAVATHU UTHAVUTHAA ENRU PAARPPOM.

    ReplyDelete

Powered by Blogger.