வடமாகாண சபை தேர்தலுக்கு முஸ்லிம்கள் தயாரா..?
(முசலியூர்.கே.சி.அஸ்ஹர்)
விரைவில் வடமாகாணசபைத் தேர்தல் நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. இச்சந்தர்ப்பத்தில் வட மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் தமது வாக்குரிமையை மிகவும் புத்திசாதுரி;யமாகவும், தூரநோக்குடனும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். வன்னி மாவட்டத்தில் எமது ஒற்றுமையின் பலனாகவே நாம் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றோம . இதை ஒரு போதும் நீங்கள் மறந்து விடக்கூடாது.
எமக்குள் ஒரு விரிசல் ,பிளவு என்பன ஏற்பட்டு அரசியல் கட்சிகள், சுயேற்சைகள் என பல் முனைப்போட்டிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டால் எமது வாக்குகள் சிதறடிக்கப்பட்டு எமக்கான மாகாணசபை உறுப்;பினர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனை எம் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளும் உலமாக்களும் எம் உடன் பிறப்புகளுக்கு விளக்கவேண்டும்.எமது மக்கள் வடமாகாணத்திலும், புத்தளம், அனுராதபுரம், கொழும்பு, போன்ற பிறமாவட்டங்களிலும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எமது ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள் (சிறுதுளி பெருவெள்ளம்).
எவ்வளவோ தியாகங்களுக்கு மத்தியில் கிடைத்த எமது அடிப்படை உரிமையான வாக்குரிமையை ஒரு போதும் பயன்படுத்தாமல் விட்டுவிடாதீர்கள் , எமது சமூகத்தில் உள்ள வயோதிபர்கள், பெண்கள் செல்வந்தர்கள் , கற்றவர்கள் போன்றவர்களில் தேர்தல் காலங்களின் வாக்களிக்கச் செல்வதில்லை. இது மிகவும் சிந்திக்கப்படவேண்டிய விடயம் , சிலர் தாம் பல தேர்தல்களில் வாக்களிக்கச் செல்லவில்லை, அரசியல் வாதிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லையனக் கூறுவதை நான் என் காதால் கேட்டுள்ளேன்.
அமைச்சர் அஸ்ரப் அவர்களின் வருகைக்குப்பின்னர் கிழக்கில் முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு போல வடபுல முஸ்லிம்களிடத்தில் பெரிதாக ஏற்படவில்லை. இதனை மாற்றியமைக்க வேண்டும். ஒவ்வொரு பிரஜையும் அரசியல் விழிப்புப் பெற்றவராக மாற வேண்டும். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் விழிப்படையவேண்டும்.
நாம் சிறந்த ஒரு பிரதி நிதியை தெரிவு செய்கின்ற போது அவர் செய்கின்ற நல்ல சமூக நலத்திட்டங்களுக்கான நன்மையும் நமக்கும் கிடைக்கின்றது. மாறாக எம்மால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதி ஒரு மோசடிக்காரராகவோ, சமூகத்தைக் காட்டிக்கொடுப்பவராகவோ, தலைமையை அற்ப சலுகைகளுக்காக காட்டிக்கொடுப்பவராகவோ ,அதிகம் அநியாயம் செய்பவராகவோ ,இருந்தால் அவருக்குக் கிடைக்கும் பாவம் போல அவருக்கு வாக்களித்த எமக்கும் கிடைக்கும். இதை ஆழமாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
சிறந்த தலைவர்கள், சிறந்த சமூகப்பற்றுள்ள நல்ல மனிதர்கள் நமக்குள் நிறைய உள்ளனர். அவர்களை நாம் சரியாக இனம்கண்டு அவர்களை முன்னிறுத்த வேண்டும். அரசியல் என்றால் கோடிக்கணக்கில் பணமும் ,வாகனங்களும் , அடியாட்களும் வேண்டுமென்ற பிழையான மாயையில் இருந்து நாம் வெளிவர வேண்டும். முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.எஸ்.எம்.அபூபக்கர் அவர்கள் துவிச்சக்கர வண்டியிலும், கால்நடையாகவும் மக்களிடம் சென்று வாக்குக் கேட்டு வெற்றி வாகைசூடியதைச் சற்றுத்திரும்பிப் பாருங்கள்.
ஒற்றுமை எனும் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் . வடக்கின் செல்வாக்குள்ள முஸ்லிம் அமைச்சரின் கரத்தைப் பலப்படுத்துங்கள். தேர்தல் நெருங்கினால் உங்களைப் பிழையாக வழி நடத்த பல ரூபங்களில் பல குழுக்கள்; உங்களைத் தேடிவரலாம் எச்சரிக்கையாக இருங்கள். 'தந்தை செல்வா அவர்கள் மசூர்மௌலானவை உள்வாங்கி தமிழ் மக்களுடன் முஸ்லிம்களையும் ஒன்றாக இணைந்து தலைமைத்துவம் நடாத்தியது போல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மு;ஸ்லிம் பிரிவு ஒன்றை உருவாக்க முந்நாள் உயர் நீதிமன்ற நீதியரசன் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார்'
இது சாத்தியப்படுமா ? எமது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , எமது மக்கள் காங்கிரஸ் , தேசிய காங்கிரஸ் போன்றவற்றை ஒழிப்பதற்கான ஒரு தந்திரோபாயமாகவே இதனை நான் பார்க்கிறேன். இவ்வாறான விடயங்களுக்கு (குர்ஆனில் உள்ள குல்யாஅய்யுஹல் காபிரூன் எனும் அத்தியாயத்தை வாசித்தால் அதிலிருந்து சில படிப்பினைகளை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
ஹலால் விடயமாகட்டும், பள்ளிவாயல் பிரச்சினை ஆகட்டும் எதுவாக இருந்தாலும் எமது முஸ்லிம் அரசியல் தவைர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவர் என்பதை அண்மையில் ஜனாதிபதியுடன் நடந்த கலந்துரையாடல் மூலம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
உலகில் இரண்டாவது சனத்தொகை முஸ்லிம்கள் , ஏறத்தாழ 57 முஸ்லிம் நாடுகள் உள்ளன. அணுவாயுதபலம் கொண்ட முஸ்லிம் நாடுகள் உள்ளன. அமெரிக்காவுக்கு சவால்விடுவதும் முஸ்லிம் நாடுகளே , சார்க் அமைப்பிலும் 03 நாடுகள் முஸ்லிம் நாடுகளே இவையெல்லாம் எமது பலங்களாகும் இதை முதலில் புரிந்நு கொள்ளுங்கள்.
.
muslim samoogam ezhuchchi pera wendumaanal anaiththu muslim katchigalum ontru sera wendum intraya wadakizhakku arasiyal waathigal anaiwarum maraththinaal wandawargal aagawe anaiwarum athil keyttu welwathe emathu aasai...kastamaaga irunthaalum anaiwarum athaiye munmozhiya wendum.....
ReplyDeleteAssalamu aliikum all,
ReplyDeleteWe have to select/elect few Muslims who can work with other communities to develop the North Region of beautiful Island. I don't think that we need religious or community parties on this election. I am not blaming any leader who decided to create parties for own society.
In the 80's situation is different than now a days situation. So please chose very Islamic and unselfish individual. We have to bring the peaceful North Region .
எமது முசலி சமூகம் ஜோசித்தல் கட்டாயம் சாதிக்க முடியும் இன்ஷா அல்லா.நானும் முசலிதான் (அகத்திமுரிப்பு )
ReplyDelete