'ஜம்இய்யத்துல் உலமா சபையை அடிமையாக்க சதி'
ஜம்இய்யத்துல் உலமாவை தமக்கு அடிமையானதாக வைத்திருக்க வேண்மென்பதற்காகவே ஹலால் சம்பந்தமாக இனவாத கோஷங்கள் அரசின் பின் புலத்துடன் முன் வைக்கப்படுகின்றன என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை முஸ்லிம்களின் மார்க்க உயர் சபையான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது அரசியல் சார்பற்றதாக இருக்க வேண்டுமென்பதே முஸ்லிம்களின் விருப்பமாகும். ஆனாலும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் உலமா சபையின் பிராந்திய தலைவர்கள் ஆதரவு வழங்கியதன் காரணமாக அதன் மீது அரசின் ஒரு பக்க பார்வை அதன் மீது விழுந்தது.
இந்த நிலையில் கடந்த ஜெனீவா பிரகடனத்தின் போது உலமா சபையை அரசுக்கு சாதகமாக பயன்படுத்தி அறபு நாடுகளை இலங்கைக்கு ஆதரவாக திருப்புவதில் உலமாக்களை கறிவேப்பிலையாக பயன்படுத்துவதில் பழக்கப்பட்ட முஸ்லிம் அமைச்சர்களும், அரசும் இதில் வெற்றி கண்டனர். இதன் காரணமாக உலமா சபைக்குள் மாற்றுக்கருத்துக்கள் ஏற்பட்டதோடு இது விடயத்தில் உலமா சபை தமிழ் மக்கள் மனம் புண்படாவண்ணம் நடுநிலையை கடைப்பிடித்திருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இவ்வாறிருந்தும் தம்புள்ள பள்ளிவாயல் மீதான தாக்குதலை தொடர்ந்து அதனை செய்தவர்கள் எவரும் கைது செய்யப்படவோ கண்டிக்கப்படவோ இல்லை என்பதால் அரசாங்கத்தின் நன்றி கெட்ட தனத்தை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக செயற்பட்ட முஸ்லிம் உலமா கட்சி அரசிலிருந்து வெளியேறியது. இதன் காரணமாக தமக்கு ஆதரவான உலமாக்களின் அமைப்பொன்றின் அவசியம் தேவை என்பதை உணர்ந்த அரச தரப்பும், அரசுக்கு வால் பிடிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஜம்இய்யத்துல் உலமாவை தமக்கு பணிய வைப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்தனர்.
ஏற்கனவே ஜெனீவா வரை சென்றும் அரசு தம்புள்ள விடயத்தில் பொடுபோக்கு காட்டியதன் காரணமாக ஆத்திரமுற்றிருக்கும் ஜம்இய்யத்துல் உலமா, எதிர் வரும் காலங்களில் ஜெனீவாவில் அதன் ஆதரவு கிடைக்காது என்பதை உணர்ந்து தமது அடிமையாக அதனை மாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சியாகவே ஹலால் பிரச்சினையை தூக்கி உலமா சபையின் மடியில் கை வைத்துள்ளார்கள். ஆகவே ஜம்இய்யத்துல் உலமா இத்தகைய நன்றி கெட்ட அரசியல்வாதிகளுக்கு துணை போவதை நிறுத்தி நடு நிலையை கடைப்பிடிக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்தார்.
THIS ISLAND HAS ONLY ONE NATION ONE VOICE ONE PEOPLE AND ONE JAMIYYATHUL ULAMA! PLEASE I'M REQUESTING MR.MUBARAK TO SHUT UP HIS MOUTH AND DO HIS OWN WORKS!
ReplyDelete