Header Ads



ஹம்பாந்தோட்டை அப்பிள் - சுவைத்து சாப்பிட்ட நாமல்..!


நாமல் ராஜபக்ஷ எம்.பியும், ஸ்ரீரங்கா எம்.பியும் நாமல் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் சம்பிக்க கருணாரத்னவும் கடந்த வெள்ளியன்று காலை ஹம்பாந்தோட்டை திஸ்ஸமகராம தெபரவௌ பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இப்பகுதி பாடசாலைகளின் குறைபாடுகளையும் தேவைகளையும் கண்டறிவதற்காகவே அவர்கள் சென்றனர்.

அவ்வேளை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடமிருந்து நாமல் ராஜபக்ஷவிற்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது.

மகனே! எங்கு இருக்கிறீர்கள். முடியுமானால் வீட்டுக்கு வந்து செல்லவும். நான் பார்த்துக் கொண்டு இருப்பேன்..

என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கூறினார்.

தமது இரு நண்பர்களுடன் நாமல் அங்கு சென்றார். விபரங்கள் பலவற்றை கேட்டறிந்த சபாநாயகர் அப்பகுதிவாசி ஒருவர் கொண்டு வந்த எருமைத்தயிர் இருக்கிறது. என்று கூறி மூன்று பெரிய கோப்பையில் அவற்றை ஊற்றி வருமாறு ஊழியர்களுக்கு கூறினார்.

தயிர் கோப்பைகளை பார்த்த சபாநாயகர் ஊழியரிடம் இவ்வாறு கேட்டார்.

இது எருமைத்தயிர் என நன்றாக நம்பிக்கை உள்ளதா? எனக் கேட்ட போது சந்தேகிக்க ஒன்றும் இல்லை. இது தயிர் என கூறினார்.

சபாநாயகர் தயிர் கோப்பைகளை பின்னால் வைத்தார்.

இது எருமை தயிர் அல்ல. இது வெறும் தயிர். மனிதர்கள் எமக்கும் பொய் கூறுகின்றனர். எமக்கே இப்படி என்றால் சாதாரண மக்களுக்கு எவற்றை எல்லாம் ஊட்டலாம் அல்லவா..?

அதனை ஒரு புறம் வையுங்கள். நாம் நல்ல அப்பிள் பழமொன்றை சாப்பிடுவோம் எனக்கூறி சபாநாயகர் தமது வீட்டின் பின்னாலுள்ள அப்பிள் மரத்திலிருந்து அப்பிள்களை பறித்து வருமாறு செயலாளருக்கு உத்தரவிட்டார்.

செயலாளர் அப்பிள்களை பறித்து வந்தார். பழுத்த பழங்களை வெட்டி சபாநாயகர் வழங்கினார்.

இது இங்கு உற்பத்தியான ஆப்பிளா என ஸ்ரீரங்கா எம்.பி. புதுமையாகக் கேட்டார். நன்கு பராமரித்தால் இங்கும் ஆப்பிள் வளரும், நுவரெலியாவுக்கு சென்று நீங்களும் வளர்த்துப் பாருங்கள் என்றார்.

பின்னர் மரணச் சடங்கொன்றில் பங்பற்ற அவர்கள் கொழும்பு திரும்பினர். 

ஜனாதிபதியின் பழைய நண்பரான மக்கள் வங்கித் தலைவர் டபிள்யு.ஜீ. கருணாஜீவவின் மரணச் சடங்காகும்.

ஜயரத்ன மலர்ச்சாலையில் பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.

தமது தந்தைக்கும், கருணாஜீவவுக்கும் இடையிலான பழைய நினைவுகளை மீட்டிக் கொண்ட நாமல், இரு மணித்தியால நேரத்தை செலவிட்டார்.

மரணவீட்டுக்கு நாமல் வந்த போது பல அரச பிரபலங்களின் இளம் தலைவர்களான டீசான் குணசேக, புத்திக மத்யஹேவா, பிரியத் பந்து விக்ரம போன்றோரும் வருகை தந்திருந்தனர்.

இவர்களைப் பார்த்த நாமல், நீண்ட நாட்களாக நாம் காட்ஸ் விளையாடவில்லை, தற்போது விளையாடுவோமா? எனக் கேட்ட போது அங்கிருந்தோர் இணங்கி உறங்காமல் கண்விழித்து காட்ஸ் விளையாடினர். காலை விடிந்ததும் கூட தெரியவில்லை.

சட்டத்தரணி லலித் பியும் பெரேரா,
தலைவர் -பணிப்பாளர் நாயகம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்

No comments

Powered by Blogger.