எவர்மீதும் ஹலால் உணவை நாம் திணிக்கவில்லை - றிஸ்வி முப்தி
(ஜே.எம்.ஹபீஸ்)
எவர்மீதும் ஹலால் உணவை நாம் திணிக்கவில்லை. நாம் கட்டாயப் படுத்துவததாகக் கூறுவதில் உண்மை இல்லை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.
கண்டி மீராமக்காம் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்தகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்க மேலும் தெரிவித்திருப்பதாவது,
இஸ்லாத்தில் நிர்பந்தம் கிடையாது. யாரையும் எவரையும் இஸ்லாம் கட்டாயப்படுத்துவ கிடையாது. ஹலாலை உண்பது ஹலால் முறைப்படி வாழ்வது இறைவன் இட்ட கட்டளை. அதனை மீறுவதற்கு விரும்பினால் மிறிக் கொள்பவர்களுக்கு இறை தண்டனை உண்டே ஒழிய அதுபற்றி நிர்பந்தம் இல்லை. எனவே எவர்மீதும் ஹலால் உணவை நாம் திணிக்கவில்லை. நாம் கட்டாயப் படுத்துவததாகக் கூறுவதில் உண்மை இல்லை.
சுதந்திரத்தின் பின் 1948 முதல் இந்நாட்டில் ஏற்பட்ட அனைத்து நிலைமைகளிலும் முஸ்லீமகளான நாம் பங்கு கொண்டுள்ளோம். கடந்த வருடம் ஏற்பட்ட சர்வதேச அழுத்தங்களின் போது நாம் ஜெனீவா சென்றோம் இலங்கைக்காக குரல் கொடுத்தோம் என்றார்.
நீங்கள் சொல்வது எல்லாம் முஸ்லிம்கலுக்குதானே பொருந்தும் அவர்கள்தானே மறுமையில் பிடிக்கப்படுவார்கள் மறுமையை நம்பாத காபிர்களுக்கு பொருந்தாதே!! திணிக்கவில்லை,கட்டாயப்படுத்தவில்லை என்று கூறிக்கொண்டிராமல் தற்காலிகமாகவேனும் சான்றிதல் வழங்குவதை நிறுத்தி பாருங்கள் வெளி நாட்டு வருமானம் பாதிக்கிறது என்று சொல்லி உங்கள் காலடியில் வருவார்கள்.ஜெனிவா சென்றோம் நாட்டுக்காக குரல் கொடுத்தோம் என்பதெல்லாம் அரசியல் விளையாட்டு நாட்டு பற்றை காட்ட அப்படியான காரியங்கள் செய்யத்தான் வேண்டும். அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்ல...
ReplyDeletebrother உண்மை விளங்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம், மிகவும் சிரமத்திற்கு மத்தியில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும், ஹலால் சான்றிதழ் பிரிவும் இயங்கி முழு இலங்கை மக்களையும் பற்றிய கவலையுடன் தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது, மொத்தமாக சுமார் 42 பேருடன் முழு இலங்கை முஸ்லிம் மக்களுடைய உணவு விடயத்தில் ஹலால் பிரிவு அக்கறை செலுத்துகின்றது, இந்த ஹலால் பிரிவு இல்லாவிட்டால் நீங்கள் குடிக்கும் மினரல் நீர் கூட சில வேளைகளில் ஹராமகத்தான் அருந்த வேண்டி ஏற்படும்.
ReplyDeleteவெறுமனே பிறை பார்பதோடு மட்டும் பழக்கப்பட்டிருந்த,மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜமியத்துல் உலமா சபை,ரிஸ்வி முப்தியின் தலைமைத்துவத்தின் பின்பே முற்று முழுதான செயற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளதோடு பல விடயங்களை சாதித்துமுள்ளது.இலங்கையில் அரசியல் புகுத்தப்படாத,ஊழலற்ற,அல்லாஹ்வின் திருப்தியை நாடி செயற்படும் ஒரே ஒரு சபையுமிதுதான்.ஏதோ எல்லோரும்போல் நாங்களும் எழுதுகிறோம்,எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இறுமாப்போடு கருத்துக்கூராமல் அவர்களுடைய முயற்சிகள் வெற்றிபெற அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள்.இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில்,இதுவரை கண்டிராத முஸ்லிம் விரோத செயற்பாடுகள் பெரும்பான்மையின மக்களால் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இவ்வேளையில் இலங்கை ஜமியத்துல் உலமா சபை எல்லாவகையான சூழ்ச்சிகளையும் அல்லாஹ்வினுதவியுடன் மிக சூசகமாக கையாண்டு வருவதை,சற்று சிந்தித்தாவது பாருங்கள்.
ReplyDeleteசகோதரர்களே ! உங்கள் கருத்துக்கு மறுப்பாக இதை விளங்க வேண்டாம் சகோதரர் ரிஸ்வி முப்தி அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களும் ஹராம் உணவு சாப்பிட்டால் இறை தண்டனைக்கு உள்ளாவார்கள் என்ற தோரனையில் சொல்லிருப்பதை கொண்டுதான் அப்படி எழுதினேன் மேலும் நான் சொல்ல வருவது சான்றிதழ் வழங்கும் விடயத்தை தற்காலிகமாக வேணும் நிறுத்துங்கள் நாட்டின் வருமானம் கருதி அவர்கள் இறங்கி வருவார்கள் என்பதே அண்மையில் அமைச்சர் பசில் அவர்களின் கருத்தும் நாட்டின் வருமானம் பற்றி உள்ளது கவனிக்க வேண்டும் உலமா சபையின் வருமானம் முக்கியமா முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு முக்கியமா சகோதரர்களே !எந்த சூசகமான நடவடிக்கையும் எதிர் தரப்பினர் களை முட்டாள்களாக்க முடியாது ஹலால்
ReplyDeleteஹராம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்று அவர்கள் கோசம் வைப்பதை கவனியுங்கள் அதுதான் உண்மையும் கூட முஸ்லிம்கள் பத்து பதினைந்து வருடங்கள் முன் ஹராத்தையா திண்டு கொண்டிருந்தார்கள்.இல்லையே எனவே முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் வெளிநாட்டு வர்த்தகத்திக்கும் தான் ஹலால் சான்றிதழ் தேவை எனவேதான் தற்காலிகமாக சான்றிதல் வழங்குவதை நிறுத்தினால் அவர்கள் நம் வழிக்கு வருவார்கள் என்று கூறினேன்....