கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மீது தாக்குதல்
(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பியந்த பதிரன தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள தனது காரியாலயமான வீட்டில் இருந்தபோதே கிழக்கு மாகாண சபைத்தலைவரின் மகன் உட்பட இரண்டு வாகனங்களில் வந்தவர்களே தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
தாக்கப்பட்டவரான பியந்த பதிரன திருகோணமலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
தாக்கிய மாகாண சபைத்தலைவரின் மகனும் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். பியந்த பதிரனயை தாக்கியவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment