Header Ads



கிழக்கு கடலில் மீட்கப்பட்ட மியன்மார் சகோதரர்களுக்கு உதவுவது முஸ்லிம்களின் கடமை..!

(எஸ்.எல். மன்சூர்)

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒலுவில் துறைமுகத்தினுள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட 138 மியன்மார் மற்றும் பங்காளதேச அகதிகளுக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இது பற்றி தெரியவருவதாவது நேற்று மாலையில் திருக்கோவில் கடற்பிராந்தியத்தில்  சுமார் 50 கடல்மைல் தொலைவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகொன்றை மீனவர்கள் கண்டு உடனடியாக திருக்கோவில் பிராந்தியத்தில் அமைந்துள்ள கடற்படைக்கு தகவலை தெரிவித்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய கடற்படையினர் கொழும்புக்கு அறிவித்து அங்கிருந்து திருகோணமலையிலிருந்த இரண்டு டோராப் படகுகளை களத்திற்கு அனுப்பி அகதிகளை ஏற்றிவந்த படகுகளிலிருந்து உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டியவர்களை டோராப் படகிலும் ஏற்றிக் கொண்டு கடற்படையினர் நேற்றிரவு(2013.02.02) 10.30மணியளவில் ஒலுவில் துறைமுகத்திற்கு கொண்டுவந்து, உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. பலருக்கு காயங்கள் காணப்படுவதால் அவர்களை அயலிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டும் வருகின்றனர்.

இதுபற்றி மேலும் அகதிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி மியன்மாரில் ஏற்பட்டுள்ள கலவரங்களினாலும், ஆட்சியாளர்களின் அட்டூழியங்களினாலும் குறித்த அகதிகள் கடந்த ஜனவரி 14ஆந்திகதி பங்காளதேசத்திற்கு அகதிகளாக வந்ததாகவும், பங்காளதேச அகதிகளும் இணைந்து தனது நெருங்கிய உறவினர் ஒருவர் மலேசியாவில் வாழ்வதாகவும் அங்கு செல்வதற்கான பயண ஏற்பாடுகளை பங்காளதேச படகுகாரர் மூலமாக 138பேர் பயணத்தை ஆரம்பித்ததாகவும், கடலில் சென்று கொண்டிருக்கையில் மியன்மார் கடற்படையினரால் பலமாகத் தாக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கடற்கொள்ளையரால் உள்ளதையும் இழந்து படகுக்கான எரிபொருளுமின்ற திக்குத்திசை தெரியாது கடலில் தத்தளித்தபோது தெய்வமாக வந்து எங்களை இலங்கை கடற்படையினர் காப்பாறினார்கள்.

தாகம் தொண்டை வரட்சியை ஏற்படுத்தியபோதிலெல்லாம் கடல்நீரை அருந்திக் கொண்டே வந்தாகவும், கடற்படையினர் எங்களைக் காப்பாற்றி எங்களது உயிர்களைக் காத்தனர். அதேவேளை இவர்கள் பற்றிய விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்;. 

அதேவேளை இவர்களுடன் நான்கு பெண்களில் ஒருவர் உணவின்றி இறந்துபோனதாகவும், சிலர் பலத்த காயம் காரணமாக தற்போது வைத்திய சிகிச்சைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், அட்டாளைச்சேனைப் பிரதேச சபை உதவித் தவிசாளர் அமானுல்லா, உறுப்பினர் முனாஸ் மற்றும் வைத்திய அதிகாரிகள், தாதிகள், கடற்படையினர் என பலரும் இணைந்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.



1 comment:

  1. இது மியன்மார் முஸ்லிம்களுக்கு மியன்மாரின் அராஜக அரசாங்கமும் இரத்தவெறி பிடித்த பிக்குகளும்,இனவெறியர்களும் கொடுத்த பரிசு. இதனையே இலங்கை முஸ்லிம்களுக்கும் இங்குள்ள வெறியர்கள் கொடுக்க அதிக பிரயத்தனம் எடுக்கின்றனர். இந்தச் செய்தியை திரிவுபடுத்தி சதிகாரர்கள் இனவாதத்தீயின்மேல் ஊற்றும் எண்ணையாக பயன்படுத்த முனைவர்.ஆகவே இம்மக்களுக்கு உதவுவது எமது கடமையே என்றாலும் சமயோசித புத்தியுடன் செயல்படவேண்டியுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.