'வெளிநாட்டிலிருந்து ஊடுருவி மதப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு அனுமதி வழங்க முடியாது'
""சீனாவில் மத ரீதியிலான சுதந்திரத்திற்கு எந்த தடையும் இல்லை; அதே நேரத்தில், வெளிநாட்டிலிருந்து ஊடுவி, சட்ட திட்டங்களுக்கு எதிராக,. மதபிரச்சாரம் செய்யும் அமைப்புகளுக்கு அனுமதி இல்லை,'' என, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிச நாடான சீனாவில், லட்சக்கணக்கானோர் புத்த மதத்தை பின்பற்றி வருகின்றனர். கிறிஸ்துவ மதமும் தலை தூக்க துவங்கியிருந்தாலும், மத பிரச்சாரத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும், சீன அரசு, அங்கு புதிதாக தேவாலங்களை அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், போப் வசிக்கும் வாடிகனுக்கும் , சீன கம்யூனிஸ்ட் அரசுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. திபெத்தை, சீனாவிலிருந்து பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, புத்த மதத் தலைவர் தலாய் லாமாவையும், சீனா குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையே, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் ஷெங்செங் கூறியதாவது:மத ரீதியிலான சுதந்திரம் என்ற அடிப்படை கொள்கைகளிலிருந்து. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் விலகாது. அதே நேரத்தில், வெளிநாட்டிலிருந்து ஊடுருவி. மதப் பிரச்சாரம் செய்யும் அமைப்புகளுக்கு. எந்தவிதமான அனுமதியும் வழங்க முடியாது. மத ரீதியிலான சுதந்திரத்திற்கு மரியாதை கொடுப்பது, சட்ட விதிகளின்படி மத சம்பிரதாயங்களை அனுமதிப்பது, சோஷலிச சித்தாந்தங்களுக்கு ஏற்ற வகையில் வழிகாட்டுதல்களை வழங்க மத அமைப்புகளை கேட்டுக் கொள்ளுதல் ஆகியவை கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை கொள்கை.இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment