Header Ads



ஒரு சிங்கள முதலாளியின் வேதனை..!




(வெண்டோல் உற்பத்தி பொருட்களின் முதலாளி வழங்கிய சிங்கள மொழி செவ்வியை நாம் சில மணித்தியாலங்களுக்கு முன் பதிவேற்றியிருந்தோம். அதன் தமிழாக்கமே இது)

(தமிழில் அபூ முஸ்னா + மொஹமட் றிமாஸ்)

ஹலால் இலட்சினை தற்போது பாரிய பிரச்சினையாக்கப்பட்டுள்ளது. எமது உற்பத்திகளில் மிருகக் கொழுப்பு அடங்கியிருக்கவில்லை என உற்பத்தி ஆரம்பம் முதலே சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் குறிப்பிட்டிருந்தோம். ஹலால் மூலம் அதனை மிகவும் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது. ஹலால் சான்றிதழ் பெறுவதற்கு உற்பத்தியாளர்கள் வருடத்திற்கு ஒரு இலட்சத்தி எழுபத்தி ஐயாயிரம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது எனக் கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயமாகும்.  நாம் வருடத்திற்குச் செலுத்துவது ஒன்பதாயிரம் ரூபாய் மட்டுமே. எம்மிடம் நாம் செலுத்திய பற்றுச் சீட்டுக்கள் உள்ளன. இன்று தேசிய உற்பத்தியாளர்கள் என்ற வகையில் வெளிநாடுகளுக்கு எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்கின்றோம்.  வெளிநாடுகள் என்ற வகையில் விஷேடமாக மத்திய கிழக்கு நாடுகள் உட்பட முஸ்லிம் நாடுகளில் எமது உற்பத்திகளுக்கு நல்ல கேள்வி உள்ளது. அதற்கு காரணம் ஹலால் சான்றிதழாகும். எனவே உற்பத்தியாளர்களுக்கு ஹலால் சான்றிதழ் இருப்பது இலாபமே அன்றி நட்டம் எதுவுமில்லை.  ஹலால் என்பது தகுதியானது எனப் பொருள்படும். ஹலால் இல்லை என்றால் அது ஹராம் என்பதாகும். அப்படியாயின் எமது உற்பத்திகள் தகுதியற்றவை என்பதே அர்த்தம். தகுதியற்ற உற்பத்திகளுக்கு கேள்வி இல்லை. மதிப்பு இல்லை.  தகுதி என்பதற்கு சான்றாக சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக் கொள்வதில் தப்பேதுமில்லை. இது ஜாதி பேதமின்றி அனைவருக்கும் தகுதியானவையேயாகும்.

எமது உற்பத்திகளுக்கு மிருக கொழுப்பு சேர்த்துக் கொள்வதில்ல என்பது எமது கொள்கையாகும்.  விஷேடமாக நாற்றம் ஏற்படுத்தும் பன்றிக் கொழுப்பு எமது நிறுவனப் பக்கத்திற்கே எடுப்பதில்லை.  ஹலால் சான்றிதழ் மூலம் எமது கொள்கையினை நாம் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தோம்.  சில பிஸ்கட் வகைகளில் 30 வீதம் வரை பன்றி கொழுப்பு அடங்கப்பட்டுள்ளது.  மாசியைக் கூட உண்ணாத சில சந்நியாசிகள்  தான் அறியாத வகையில் இவ்வாறு பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டவற்றைப் பாவிப்பதை இவ்வாறு ஹலால் சான்றிதழ் ஊடாக தடுக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது. வைத்தியர்கள் மூலம் மரக்கரி எண்ணெய் வகைகளை மாத்திரம் நாம் உபயோகப்படுத்துவதை அவர்கள் உறுதிப்படுத்துகின்றார்கள்.

ஒரேயொரு முஸ்லிம் ஊழியருடன் ஏராளமான பௌத்த சமய ஊழியர்கள் பணியாற்றும் எமது நிறுவனத்தில்ஊழியர்கள் மத்தியில் எதுவித பேதங்களும் இல்லை. சகோதரத்துவத்துடன் பணியாற்றுகின்றார்கள். தேவயைில்லாத வகையில் சில பௌத்த தேரர்கள் ஹலால் பிரச்சினையை ஏற்படுத்தி இருப்பது  நம்மை நாமே இக்கட்டுக்குள் தள்ளும் நிலையினை உண்டாக்கியிருக்கின்றது.

சருவதேச ரீதியில் எமக்கு வாசியான ஹலால் சான்றிதழ் மதத்தலைவர்களுக்கு மிகவும் நல்ல விடயமாகும். அவர்களுக்கும் மிருக கொழுப்பு கலப்படமில்லாத உணவு மற்றும் பொருட்களை தெரிவு செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

வெண்டோல் நிறுவனத்தினால் நாம் உற்பத்தி செய்யும் சுமார் 13 உற்பத்திகளுக்கு நாம் ஹலால் சான்றிதழ் பெற்றுள்ளோம். இதனால் எமது உற்பத்திப் பொருட்கள் பாவிப்பதற்கு தகுதியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹலாலுக்கு எதிராக எவராவது செயற்படுவார்களேயானால் அதற்கு காரணம் இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவது, யுத்தத்தை ஏற்படுத்துவதுவேயாகும்.

இலங்கையின் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி சம்பாதிக்கும் பணம் ஹலால்.  இன்று முஸ்லிம் மக்கள் ஹலால் இல்லாவிட்டால் பொருட்களைக் கொள்வனவு செய்ய மாட்டார்கள். சிங்கள மக்கள் ஹலால் இருப்பதால் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்ய மாட்டார்கள்.     ஹலால் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்காக எமது நிறுவனத்தினால் வழங்கப்படவேண்டிய ஆவணங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இம்முறை ஹலால் சான்றிதழைப் புதுப்பிப்பதில் தடங்கள் ஏற்பட்டுள்ளதுடன் எமது நிறுவனம் ஹலால் சான்றிதழைப் பெற விண்ணப்பித்துள்ளது.

ஆவணங்கள் தாமதமானதால் ஹலால் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளாததன் காரணமாக எமக்கு சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் அளவில் நட்டம் ஏற்பட்டது. வெண்டோல் உற்பத்திகளில் ஹலால் இல்லை என்பதற்காக முஸ்லிம் மக்கள் எமது வெண்டோல் பொருட்களை வாங்குவதில்லை. இன்று சில தேரோக்கள் கூக்குரலிட்டு ஹலால் நடைமுறையினை ஒழிப்பதற்கு திகதி நிர்ணயித்துள்ளார்கள்.  தொடர்ந்து இவ்வாறு அவர்கள் செயற்பட்டார்களாயின்  எமது நிறுவனம் நட்டத்தை எதிர்கொள்வதால் எமது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிலையே எனக்கு ஏற்படும்.  இன்று மத்திய கிழக்கு நாடுகளில் முழுவதுமாக வெண்டோல் உற்பத்திகள் பாரியளவில் பாவிக்கப்படுகின்றது.  மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் வீட்டுப் பணிப்பெண்கள் வெளிநாடு செல்லும் போது ஹலால் சான்றிதழ் பொரிக்கப்பட்ட வெண்டோல் உற்பத்திகளையே வாங்கிச் செல்கின்றனர். ஹலால் சான்றிதழை நிறுத்த முடியாது. நாம் அவ்வாறு அதனை நிறுத்தப் போவதில்லை. கிணற்றுத் தவளைகளாக வாழ்வதற்கு எம்மால் முடியாது. எமது உற்பத்திப் பொருட்களை இலங்கையினைப் போல வெளிநாடுகளிலும் சந்தைப் படுத்த வேண்டும்.  ஐ.எஸ்.ஓ. சான்றிதழைப் பெறுவதற்கு நாம் ஒன்றரை இலட்சம் ரூபாவினைச் செலுத்துகின்றோம். அதுமட்டுமில்லை. எஸ். எல். எஸ் சான்றிதழ் பெறவும் நாம் பணம் செலுத்துகின்றோம். அவ்வாறு பணம் செலுத்தியாவது சான்றிதழைப் பெற்றுக் கொள்வது அந்த சான்றிதழின் மூலம் எமது உற்பத்திகளுக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகும்.  பொது பல சேனா இதுவரையிலும் உற்பத்தியாளர்களிடம் இது தொடர்பில் விசாரணை செய்யவில்லை.

நாம் உண்மையைக் கதைக்க வேண்டும். உற்பத்தி செய்வோர் உற்பத்தியாளர்களே.  தொடர்ந்து நிலைமை இவ்வாறு சென்றால் நிறைய ஊழியர்களின் தெழில் இழப்பு நிகழும். இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று முஸ்லிம் மக்களின் கீழ் பணியாற்றும் நம்நாட்டு பெண்களின் தொகை அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

No comments

Powered by Blogger.