பொலநறுவையில் திறக்கப்படவுள்ள நீதிமன்ற கட்டிடம் - ஹக்கீம் ஆராய்வு
தேசத்திற்கு மகுடம்' அபிவிருத்தி கண்காட்சிக்கு சமாந்தரமாக பொலநறுவையில் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள கட்டடங்களின் நிர்மாண வேலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பற்றி ஆராய்வதற்காக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அண்மையில் அங்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
பொலநறுவை நீதிமன்றத்திற்கு வருகை தந்த அமைச்சர் அங்குள்ள வசதிகளைப் பற்றி நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்தினார். அப் பேச்சுவார்த்தையின் போது பொலநறுவை உயர் நீதிமன்ற நீதிபதிக்கான வாசஸ்தலத்தை நிர்மாணித்தல், சட்டத்தரணிகளுக்காக புதிய அலுவலகமொன்றை அமைத்தல், ஹிங்குரங்கொட பகமுன மற்றும் மன்னம்பிடிய புதிய நீதிமன்ற கட்டடங்களை திறந்து வைத்தல் போன்ற விடயங்களிலும் அமைச்சர் ஹக்கீம் கவனம் செலுத்தினார்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
Post a Comment