Header Ads



முஸ்லிம்களை சந்தேகிக்காதீர்கள், ஹலால் உணவு சுத்தமானதே - பிரதமர் ஜயரட்ணா



(கம்பளையிலிருந்து எம்.எம்.எம். ரம்ஸீன்)  

முஸ்லிம் சமூகத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்கக்கூடாது என்று பிரதமர் டி.எம். ஜயரட்ண இன்று 09.02.2013 கம்பளையில் நடைபெற்ற பாடசாலை கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

கம்பளை இல்லவதுரை ரஹ்மானிய்யா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் ஜே.எம். சஹீர் தலையில் நடைபெற்ற புதிய கட்டிடத் தொகுதியின் திறப்பு விழாவில் 09.02.2013 பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

1970 களில் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது அரபு முஸ்லிம் நாடுகள் எரிபொருளை இலவசமாக வழங்கி இலங்கையின் பொருளாதாரத்திற்கு கைகொடுத்தது. அதேபோல் இலங்கை முஸ்லிம்களும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளனர். எனவே முஸ்லிம் விரோத போக்கு தொடரவும் இணங்களுக்கிடையில் பகைமையை வளர்த்து புரிந்துணர்வை சிதைக்கவும் ஜனாதிபதி ஒருபோதும் இடமளிக்க மாட்டார். 

நாட்டில் ஹலாலாலை பூதாகரமாக்கி பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை. ஹலாலான உணவு என்பது சுத்தமான உணவாகும்.  இனவாதம் மற்றும் மதவாதம் மூலம் இனங்களுக்கிடையில் நிலவும் புரிந்துணர்வை ஒழிக்க முற்படும் சக்திகளுக்கு ஜனாதிபதி ஒருபோதும் இடமளிக்க மாட்டார். முஸ்லிம் நாடுகள் அன்றும் இன்றும் எமக்கு உதவி வருகின்றன. 

உலகில் சகல நாடுகளிலும் முஸ்லிம்கள் பலமான சமூகமாக வாழ்கின்றனர். நமது தாய் நாட்டில் சிங்கள முஸ்லிம் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவு நிலவுகின்றது. இதனை சீர்குலைக்க முடியாது. 
   
யுத்தத்தின் பின்பு இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டு சமாதனாம் கட்டியெழுப்பட்டுள்ளது. எனவே  இனங்கள் மத்தியில் பகைமைகளை வளர்க்க இடமளிக்க முடியாது. இதனை சிறு சக்திகள் செய்ய முற்படுகின்றன. செல்லக்கூடாது. நாம் முஸ்லிம் சமூகத்தை சந்தேக கண் கொண்டு நோக்கக்கூடாது.    

சர்வதேசத்தின் முன்னால் இலங்கைக்கு எதிராக விரல் நீட்டப்படுகின்றது. நாம் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்றும் குறிப்பிட்டார். இதில் பிரதியமைச்சர் அப்துல் காதரும் கலந்து கொண்டு உரையாற்றினார். 











4 comments:

  1. Well done PM, You have to declare it among your community. No use of justifying the Halal among us.

    ReplyDelete
  2. சார் சொல்வது....

    பொது பல சேனா விற்க்கும், அரச முஸ்லிம் பாராளுமன்ற உறுபினர்களுக்கும் (அப்துல் காதரையும் சேர்த்து) தானே?

    நீங்க கூறிய கருத்துகளுக்கு நன்றி; ஆனால் செயற்பாடு ? ஒரு கூப்பாடு ?

    ReplyDelete
  3. PM அவர்களே நீங்கள் சொல்ல வேண்டிய இடம் முஸ்லிம்களின் நிகழ்ச்சிகளில் அல்ல உங்கள் சமூகத்தவர்கள் முன்னிலையிலும், உங்கள் சமூகத்தவர்களின் நிகழ்ச்சிகளிலும்தான்.

    ReplyDelete
  4. sariya sonniga ahlas awarhala

    ReplyDelete

Powered by Blogger.