Header Ads



இது என்ன மீன்..? (படங்கள் இணைப்பு)


(எஸ்.எல். மன்சூர்)

இன்றைய கற்பித்தல் முறைகளில் உபகரணப் பயன்பாடு முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகின்றது. சீனப் பழமொழி ஒன்று 'கேட்டேன் மறந்துபோனேன். பார்த்தேன் நினைவில் வைத்தேன். செய்தேன் புரிந்து கொண்டேன்' எனக் கூறுகின்றது. அதாவது எந்தவொரு விடயத்தையும் கேட்டோ, பார்த்தோ, செய்வதைவிட நேரடியாக நாமாகவே செய்கின்றபோது அதனை இலகுவாகக் கற்றுக் கொள்ளலாம் என்பதே இதன் அர்த்தமாகும். இதற்கொப்ப அக்கரைப்பற்று வலயக் கல்விக்குட்பட்ட பொத்துவில் கோட்டப் பாடசாலையான தாறுல் பலாஹ் பாடசாலையில் தரம் ஒன்று மாணவர்களின் கற்றலுக்காக அந்த வகுப்பாசிரியை மற்றும் மாணவர்களின் பெற்றோர்களினால் உருவாக்கப்பட்ட ஆக்கப் பொருள்கள் நிறையவே காணப்படுகின்றன. அந்தவகையில் மாணவி ஒருவர் தனது வகுப்பறையில் உள்ள மீன் உருவத்தை கையிலெடுத்து பார்ப்பதையும், ஏனைய கற்றல் உபகரணங்களையும் படங்களில் காணலாம். இந்த மீன் தென்னம் பாளையினால் உருவாக்கப்பட்டுள்ளது.அதிக மாணவர்களை வகுப்பறைகளில் கொண்டுள்ள இப்பாடசாலையில் ஆசிரியர் வளப்பற்றாக்குறை நிறையவே காணப்படுவதாகவும், அதிகளவு மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பறைகளில் காணப்படுவதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார். 

இருந்தபோதிலும் ஆசிரியர்களின் விடா முயற்சியுடன் மாணவர்களின் கற்றல் மேம்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவதற்கு இந்தப் பாடசாலையின் கற்றல் உபகரணப் பயன்பாடும் ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 








1 comment:

Powered by Blogger.