Header Ads



பொத்துவில் பெரிய பள்ளிவாயல் நிர்மானப்பணி தொடருமா..?



(ஜே.இர்ஷாத் (ஷர்கீ)

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தொழுகையினை நிறைவேற்றக்கூடிய வசதிகளைக்கொண்ட  விசாலமான, பிரமாண்டமான,அழகிய தோற்றத்தை கொண்ட பள்ளிவாயல்கள் இருப்பதினையும்,இது போன்ற ஒரு பள்ளிவாயலாவது எமது ஊரில் இல்லையே என்று கவலைப்பட்ட குறிப்பிட்ட ஒரு குழுவினரால் கடந்த 2008ம் ஆண்டு பொத்துவில் பெரிய பள்ளி வாயலை மஸ்ஜிதுல் அக்ஸாவின் தோற்றத்தில் புணர் நிர்மாணம் செய்வதென தீர்மானிக்கப்பட்டு, பொருளியலாளர் ஜப்பார் அவர்களை தலைவராகவும், மெளலவி நுஸ்ரத் அவர்களை பொதுச்செயலாளராகவும் கொண்ட அக்குழுவினர் 2008.01.01ம் திகதி கூடிய கூட்டத்தில் கட்டுமாணத்திற்கு தேவையான பணத்தினை பொத்துவில் மக்களிடத்திலும்,வெளி பிரதேசங்களிலும் வசூலித்தல், சேகரிக்கப்படுகின்ற பணத்தினை கட்டுமான பணிக்கு மாத்திரம் செலவிடுதல், இணைய தலம் ஒன்றினை உருவாக்கி தகவல்களை அதனூடாக மக்களுக்கு பகிறங்கப்படுத்துதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.

மேற்படி முடிவுகளுக்கு அமைய பெரிய பள்ளிவாயலின் www.pottuvilgrandmosque.org         இணய தலத்தின் தகவல்களின் படி 2008 ஜூலை 260525/=ரூபா,ஆகஸ்ட் 243980/= ரூபா,செப்டம்பர் 195075/= ரூபா,ஒக்டோபர் 66425/= ரூபா வசூல் செய்யப்பட்டதாகவும்,மொத்தமாக 786355/= ரூபா பணம் கிடைக்கப்பெற்றதாகவும் குறித்த இணையப்பதிவு குறிப்பிடுகின்றது. 

குறித்த குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாயலின் கட்டட வேலைகள் கைவிடப்பட்டதோடு,கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பாவனைக்கு உதவாத நிலையில்  காணப்படுகின்றன. இவ் வேலைகள் கைவிடப்பட்டமைக்கான பிரதான காரணமாக பொத்துவிலின் முன்னேற்றத்துக்கு காலம் காலமாக கோடரிக்கம்புகளாக இருப்பவர்கள்தான் காரணம் என தெரிவதோடு குறித்த பணியில் ஈடுபட்டவர்கள் நமக்கு எதற்கு தேவையில்லா வேலை,கள்வர் பட்டம் என்று குறித்த வேலையில் இருந்து விலகியதன் காரணமாக நான்கு வருடங்களாக கட்டட வேலை இடை நிருத்தப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் பாவனை செய்வதற்கு முடியாமல் துறுப்பிடித்து காணப்படுகின்றன.  

குறித்த கோடாரிக்கம்புகளின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் வேலை ஆரம்பிக்கப்பட்ட நான்கு வருடங்களுக்கும் சுமாராக 11795325/= ரூபா மக்களிடம் இருந்து பெறப்பட்டு பெரும்பான்மையான வேலைகள் முடிந்திருக்கும்.

கைவிடப்பட்ட குறித்த பள்ளிவாயலின் புதிய கட்டட வேலையினை ஆரம்பித்து பொத்துவிலில் முதன் முதலாவது கம்பீரமான அழகிய தோற்றத்தைக்கொண்ட பள்ளிவாயல் உருவாகுவதற்கு பொத்துவில் படித்தவர்களும்,அரசில் வாதிகளும்,வசதி படைத்தவர்களும் முன்வருவார்களா???

பொத்துவில் சமூகம் இவ்விடயத்தில் சிந்திக்குமா?????? 

No comments

Powered by Blogger.