Header Ads



எதிர்ப்புகளிடையே துணிவுடன் தனி விமானத்தில் இந்தியா செல்கிறார் ஜனாதிபதி மஹிந்த


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 8 ஆம் திகதி. வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி திருப்பதிக்கான விஜயம் மேற்கொள்கிறார். ஜனாதிபதி இதற்கு முன்னர் இரு முறை திருப்பதிக்கு விஜயம் செய்துள்ளார். இது அவரது மூன்றாவது விஜயமாகும்.

தனி விமானம் மூலம் இந்தியா செல்லும் ஜனாதிபதி பீகார்-புத்தகயா- ரேணிகுண்டா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்குச் சென்று விசேட வழிபாடுகளை நடத்துவார்.

இந்தியாவுக்கு ஜனாதிபதி  வருவதற்கு புலி ஆதரவு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற போதிலும் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மத்திய அரசும் ஆந்திர அரசும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

No comments

Powered by Blogger.