Header Ads



பொதுபல சேனாக்கு ஆசிர்வாதம் வழங்கிய மஹிந்த - அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்



(அஷ்ரப் ஏ. சமத்)

பொதுபல சேன செயலாளர் கங்கொடவில ஜனா சமுத்திர தேரர் 'மெக்ஸ்'  தணியார் தொலைக்காட்சியில்  4ம் தட்டு என்ற நிகழ்ச்சியில்  நேர்காணல் கடந்த (6)வியாழக்கிழமையும் மறு ஒளிபரப்பாக ஞாயிற்றுக் கிழமை (10)ம் திகதி காலை 09.00 11.00  மணிவரை  2 மணித்தியாலயங்களாக ஒளிபரப்பபட்டது.

இவ் ஒளிபரப்பில் தேரர் தெரிவித்த கருத்துக்கள் சிலவற்றின் சுருக்கம்

இந் நிகழ்ச்சியை ஊடகவியாளர் பிரதீப் நெறிப்படுத்தினார். 

பொதுபலசேன அமைப்பினால் நாடு பூராவும் வாழும் முஸ்லீம்களது அன்றாட நடவடிக்கைகளை நாளாந்தம் நாம் அவதாணித்து வருகின்றோம். அவர்களில் உள்ள அல்சலபி  மற்றும் வகாபி இயக்கங்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றி ஊடகம் வாயிலாகவும், வெப்தளம் ஊடாகவும் அவதானித்தோம்.

ராஜகிரியையில்  முஸ்லீம் இயக்கம் ஒன்று உள்ளது. அவ் இயக்கம் 1 மாதத்திற்கு 81  ஏனைய மதத்தவர்களை முஸ்லீம்களாக மாற்றுகின்றனர். இதற்குக் சான்றாக நாங்கள் பத்திரிகையில் பெயர்மாற்றம் வரும் விளம்பரத்தினை சேகரித்து வைத்துள்ளோம்.

அக்குரணையில் 82 பள்ளிவாசல்கள் உள்ளன. அங்கு பண்சலை 13 மட்டுமே உள்ளது.  இவர்கள் ஒவ்வொரு நகரத்திலும் பள்ளிவாசல்கள் கட்டி வருகின்றனர். சிங்கள கிராமத்தில் 3 முஸ்லீம் குடும்பம் இருந்தாலும் 1 பள்ளிவசாலைக் கட்டிவிடுவார்கள்.  அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் கின்ணியாவில் சவுதி அரேபியா பிரமுகர் ஒருவரினால் பிரமாண்டமான பள்ளிவாசால் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. ஆனால் முதூரில் உள்ள றிசானாவுக்கு அந் நிதியில் ஒரு வீட்டை நிர்மாணிக்க அவர்களுக்கு மனம் வரவில்லை.

ஒவ்வொரு வருடமும் மக்காவுக்குச் செல்வதென்று அங்கு மாடு அறுப்பதற்காக 31 கோடி இலங்கைப் பணம் அங்கு செல்கின்றது.

ஹலால் என்ற அறபு வசனம் பதிக்கப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி இந்த நாட்டில் உள்ள 93 வீதமான மக்களையும் உண்ணச் சொல்கின்றார்கள்.  சவக்காரம் மற்றும் சாம்பிராணி போன்ற குச்சிகளிலும் ஹலால் முத்திரை பொறித்துள்ளனர். இந்த ஹலால் போட்ட உணவுகளே நாம் எமது புத்தருக்கும் உணவு வைக்க வேண்டியுள்ளது. 

அப்படியெண்றால் நாங்கள் பிரித் செய்த நூலைப் கட்டிய தண்ணீப்போத்தலை கொண்டுவந்தால் முஸ்லீம்கள் வாங்குவார்களா ? இதற்காகவே 2013 ஜ ஹலாலை  ஒழிக்கும் ஆண்டாகப் பிரகடணப்படுத்தியுள்ளோம்.

இவர்கள் வேண்டுமென்றால் சுப்பர் மார்க்கட்டில் ஹலால் உணவுகள் என வகைப்படுத்தி வைக்கட்டும் அதனை முஸ்லீம்கள் வாங்குவார்கள். ஆனால் ஏனையவருக்கும் ஹலால் உணவு உண்னும்படி நிர்பந்திக்கக் கூடாது.

முஸ்லீம்கள் வியாபாரம் செய்வதிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள். 

இங்கிலாந்து நாட்டில் கூட பல சமுகங்கள் வாழுகின்றனர். அங்கு அவர்களது யாப்பில் சொல்லப்பட்ட ஹிரிஸ்த்துவ  மதமட்டும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அம் மதப்பெரியார்களுடன் ஏனைய சர்வமதத் தலைவர்களை இருக்கச் சொல்ல மாட்டார்கள். ஆனால் இலங்கை பௌத்த நாடு சகல தேசிய நிகழ்விலும் பௌத்த மத நிகழ்வு மட்டுமே இடம் பெறவேண்டும்.

பௌத்த இனம் அருகி இஸ்லாமிய மதமும் சனத்தொகையும் பெருகிக் காணப்படுகின்றது. 

சிங்களவர்கள் 2, 3 குழந்தைகளுடன் குடும்பக்கட்டுப்பாடு செய்து நமது சமுதாயத்தை குறைத்து வருகின்றனர். மற்றும் சாஸ்திரம், நேரம், குலம் என தெரிவித்து சிங்களப் பெண்பிள்ளைகள் 16ல் கலியாணம் செய்ய வேண்டிய பெண் 30 வயதாகியும் கல்யாணம் கட்டாமல் உள்ளனர். 

எங்களது இயக்கம்மாபெரும் மகாநாடொன்றினை பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த நாட்டில் அந்தவாதி முஸ்லீம், அல் கயிதா போன்ற முஸ்லீம் இயக்கங்கள்  பெருகிவருகின்றன.  அவர்களுக்கு பாரிய நிதி உதவிகள் பெருகி வருகின்றன. 

எங்களது செயற்பாடுகள் பற்றி ஐனாதிபதிக்கு எடுத்து கூறுவதற்கு நல்லதொரு சர்நதர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது எங்களது 5 திட்டங்கள் அவரிடம் கையளித்தோம். அதனை செயற்படுத்த அவரது ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைத்துள்ளது.

எங்களை கெலிக்கெப்டர் முலம் ஐனாதிபதி அழைத்து 15 நிமிடம் பேச அழைத்தார். ஆனால்  எங்களது நடவடிக்கை செயற்படுகள் மற்றும் முஸ்லீம்களது செயற்பாடுகள் பற்றி நாங்கள் எழுத்து முலமும் ஆதாரபூர்வமாக வைத்த தர்க்கங்கள் முன்வைத்தோம். இதற்காக  ஜனாதிபதி மேலும்  3 மணித்தியாலய எங்களுடன் செலவிட்டார்.  

தொடர்ந்து எங்களது செயற்பாடுகளை முன்னெடுக்கும்படி  ஜனாதிபதி ஆசிர்வாதம் வழங்கினார். இச் செயற்பாடுகளை ஐனாதிபதியே செயற்படுத்துவதற்கே திட்டமிட்டிருந்தாகவும்.  குடும்பக் கட்டுபாடு திட்டத்தினை உடனடி தளர்த்தும்படியும் சுகாதார அமைச்சரின் செயலாளாருக்கு பணிப்புரை விடுத்த்ர். எனவும் தேரர் தெரிவித்தார். ஜனாதிபதியை சந்திக்கும்  சர்ந்தப்பத்தை முஸ்லீம் அமைச்சர்களே ஏற்படுத்தி தந்திருந்தார்கள். 

எங்களது பொதுபலபேன சங்கம் நாடு பூராவும் வியாப்பித்துள்ளது. இச் சங்கம் பற்றி மையங்கனை மூலை முடுக்குகளில் உள்ள ஒவ்வொரு பௌத்தர்களுக்கும் தெரியப்படுத்தபட்டுள்ளது. அவர்கள் இனி விழிப்பாக இருப்பார்கள்.



10 comments:

  1. Also better bhudist monks allowed to marry otherwise female cann´t go temple freely.

    ReplyDelete
  2. We expected this. BBS has full support of SL Govt.

    ReplyDelete
  3. phongada-mownam enrum engal vetry.

    ReplyDelete
  4. கௌரவ தேரர் அவர்களே உங்கள் பெண்கள் 16 திருமணம் முடிக்கும்போதும்,குடும்பக்கட்டுப்பாடற்ற வாழ்க்கையை தொடரும் போதும் நாட்டிற்கும் வீட்டுக்கும் நல்லதாகும்.,விபச்சாரம் ஒழிந்து நாடு சுபிட்சம் அடையும் ஆனால் ஒரு சிலருக்கு(சில பிரமச்சாரிகளுக்கு).........?????. அடுத்து நாம் பள்ளிவாசல் கட்டுவதையிட்டு நீங்கள் கவலைப்படவேண்டாம் நாம் உங்களின் இடங்களில் பள்ளிவாயல் கட்டவில்லை. இது எமதும் நாடு இங்கு எல்லா இனங்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு ஆனால் அடுத்தவர் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தால் அடியும்,உதையும் வாங்க வேண்டி வரும் மறந்து விட வேண்டாம்.

    ReplyDelete
  5. மஹிந்த்தா மகிமை இழந்து தனக்குதானே குழிவெட்டிகொண்டிருப்பதால் யாருக்கு இருதியில் நஷ்டம்??? மஹிந்த சிந்தனா ஒழிந்து மீண்டும் சந்திரிக்கா சிந்தனை நாட்டை கோலோட்ச நெடுநாள் எடுக்காது என்பதையே நிகழ்வுகள் சுட்டி நிட்கின்றன

    ReplyDelete
  6. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதுதானா மஹிந்த சிந்தனை?

    ReplyDelete
  7. பொது பல சேனா வின் ஆர்ப்பாட்டங்கலுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத போது ஜனாதிபதி தலைமையிலான அரசாஙகம் தான் உந்து சக்தி என்பது தெரிந்தது தானே.
    அம்பாரைக்கு அமைச்சுப் பதவி கிடைக்காததனால் ரவ்ப் ஹகீம் 1 மாதம் அரசங்கத்துக்கு காலக்கெடு விதித்துல்லாராம்.....?

    ReplyDelete
  8. நான் அப்பவெ ஸொன்னென்

    ReplyDelete
  9. நான் அறிந்து இது கோட்டா,ராஜபக்சேர வேல....

    ReplyDelete
  10. Muslims pray five times a day they need a place to have congrats to pray it is obligatory if Buddhist they can built any no. of temple as per news paper article former jaela mayor ganasero has wife and children this is against Buddhist religion

    ReplyDelete

Powered by Blogger.