பாகிஸ்தான் தலிபான் இயக்க தலைவர் கைது..?
பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் மூத்த கமாண்டர் மவுலவி பாகிர் முகமது. ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இயங்கி வரும் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தின் கமாண்டராக செயல்பட்டு வருபவர் மவுலவி பாகிர் முகமது.
2008-ம் ஆண்டு ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதால் பாகிஸ்தானை விட்டுச் சென்ற முகமது, ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் தஞ்சம் அடைந்தார். 2011-ம் ஆண்டு வரை தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தில் தலைவர் ஹகிமுல்லா மெஸத்திற்கு அடுத்த இடத்தில் இருந்தார்.
இந்நிலையில் முகமதுவும், அவரது உதவியாளர்கள் 4 பேரும் நாங்கிரகார் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல முயன்றனர். அப்போது அவர்களை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள், முகமது கைது செய்யப்பட்டிருப்பது சரியானது என்றும், ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும்வரை அதனை நாங்கள் வெளியிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் மறைந்திருக்கும் மற்ற இயக்க கமாண்டர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் கமாண்டர் முகமது கைது தொடர்பாக பாகிஸ்தான் தலிபான் இயக்கம் எந்த தகவலும்
Post a Comment