Header Ads



பொது பலசேனா முஸ்லிம் அடிப்படை வாதத்தை தோற்றுவிக்கும்..!



(கலாநிதி தயான் ஜயதிலக)

சமீபத்தில் மகரகமவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை படிக்கும்போது, ஒரு அரசியல் விஞ்ஞானி என்கிற வகையில் சிங்கள சமூகத்தின் இருண்ட அடிப்பகுதியில் இருந்து இன - மத பாசிச இயக்கம் ஒன்று தோற்றம் பெறுவதற்கு சாட்சிகளாக இருக்கிறோம் என்பதற்கு குறைவான ஒன்றுமில்லை என்கிற தெளிவான தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. 

இந்தக் குணவியல்பினைத்தான், அரசியல் தத்துவவியலாளர்களான ஹன்னா ஆரென்ட், மற்றும் றெயின்கோலட் நைபூர், போன்றவர்களும் மற்றும் வெகு சமீபத்தில் அலன் வுல்ஃப் என்பவரும் அரசியல் தீவினை என வகைப்படுத்தியுள்ளார்கள். ஜனாதிபதி ராஜபக்ஸ மீது சர்ச்சையான விவாதங்களை தூவி அவரை ஹிட்லரைப் போன்ற பாசிசவாதி என்று அடையாளங் காண்பதற்காக தங்கள் சிரமங்களை செலவிடுபவர்களுக்கு அதற்கு வெகு நெருக்கமாக பொருத்தத்தை ஏற்படும் விதத்தில்; ஒரு உண்மையான இயக்கம் உருவாகியுள்ளது.

சோவியத் யூனியனின் சரிவு மற்றும் மிகப் பெரிய சோசலிச மாற்றீடு என்பனவற்றை தொடர்ந்து ஏற்பட்ட ஒற்றை வல்லரசின் ஆதிக்கத்தின் விடியலினால் சாதாரணமாக வெறித்தனமான இன அல்லது இன, மத, அரசியல் இயக்கங்கள் உலகளாவிய ரீதியில் முன்னிலைக்கு வந்தன, ஸ்ரீலங்காவுக்கு எதிரானவர்கள்  எழுச்சி பெற்றது, யுத்தத்துக்கு பின்னான எங்கள் அரசியல் முறைகளில் உள்ள வல்லாதிக்கம் மற்றும் ஜனநாயக எதிர்க்கட்சிகளின் உட்பூசலின் மெதுவான இயக்கத்தினால் ஏற்பட்ட சரிவினால் உருவான வெற்றிடம் என்பனவற்றின் காரணங்களினால்தான்.

இதை வெகு உன்னிப்பாகக் கவனித்தால், இந்த இயக்கத்தின் எழுச்சியின் வலுவான பின்னணி ஐந்து காரணிகளின் சங்கமத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆட்சியினரின் பக்கத்தில் உள்ள கனிவான சகிப்புத் தன்மை, இல்லையெனில் ஆரம்ப ஆதரவு. இந்த நிகழ்ச்சியின் முன்னோடியாக அரசாங்கத்தின் அரசியலுக்குள் இணைந்துள்ள ஒரு கட்சியால்  நடத்தப்படும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம், ஒரு புதிய போராளிக் குழுவின் சமீபத்தைய அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள வைக்கிறது.

மிகவும் உயர்வான முக்கிய இடமான கொழும்பு இந்த தீவிரவாதிகளின் உறைவிடமாக வேகமாக வளர்ந்து வருவதுகூட ஆதரவின் அணுகல் இருப்பதை அடையாளம் காட்டுகிறது. பன்முகத்தன்மை மற்றும் அரசியல் மேதகத் தன்மை என்பனவற்றை உள்ளடக்கிய நிலைப்பாடு மற்றும் பிரசங்கங்கள் என்பன அரசியல் தலைமையிடம் இல்லாதிருப்பதுடன் மற்றும் அப்படியான ஒரு நிலைப்பாட்டை பின்பற்றுவதற்கும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. மாறாக இராணுவ பெரும்பான்மை வாதத்தின் ஆதிக்கம் நிறைந்த ஆட்சிப் பிரசங்கம் நிகழ்த்தப்படுகிறது, அது அதிகளவிலான போர்க்குணமுள்ள துணை இயக்கங்களை  நெறிப்படுத்துவதுடன், வெறுக்கத்தக்க பேச்சுக்களை பாய்ச்சுவதுடன்,ஆட்சியையும் நாட்டையும் ஏதோ ஒன்றைக்கூறி மிரட்டி வருகிறது.

மிதவாத தேசியவாதிகளின் இருப்பு மற்றும் சமூகரீதியான முன்னேற்றங்கள் அதாவது சமூக ஜனநாயக எதிர்க்கட்சிகள் என்பன இல்லாதிருக்கிறது. ஒரு சேதன நெருக்கடியின் நீடித்த வேதனைதான் எதிர்க்கட்சி  என்று அன்ரோனியோ கிராம்சி வரையறுத்துள்ளார், அதில் ஒரு கட்சியின் பாரம்பரிய சமூக ஆதரவு வரண்டுபோகிறது. எதிர்கட்சியின் சேதன நெருக்கடி, எதிர்கட்சி தலைமையின் அசேதன அல்லது சேதனம் அல்லாத குணாதிசயங்களில்; வேரூன்றி இருப்பதால் தேச மக்களின் கூட்டு விருப்பத்தை பிரதிநிதிப் படுத்தும் ஒரு சேதன எதிர்க்கட்சியின் தோற்றம் இல்லாமல் போய்விடுகிறது (கிராம்சி).

சட்ட அமலாக்கலை மேற்கொள்பவர்கள், விசாரணைகளை மேற்கொள்ளாமல், பெரும்பான்மை குணாதிசயம் உள்ள தீவிரவாத இயக்கங்களை கைது செய்வதை  மிகவும் குறைவாகவே நடைமுறைப்படுத்துவது போன்றவைகள் அரச அதிகாரிகளின் தந்திரமான கூட்டு சதி.

 ஏனெனில்  அவ்வாறானவை  சிறுபான்மையினரின் கலாச்சாரா திட்டங்களை கண்காணிக்கும் பொறுப்பு பெரும்பான்மையினரின் விதிகளின் வரிசையில் சுமத்தப்பட்டுள்ளதுடன் மற்றும் உண்மையில் அதுதான் அவர்கள் செயற்படுத்தவேண்டிய பாத்திரம் என்று நினைக்கும்படி சமிக்ஞை காட்டுகிறது அல்லது அவ்வாறு சமூகமயப்படுத்தப் பட்டுள்ளது. 

இடதுசாரிகள் பலவீனமாகியுள்ளனர், இங்கு நான் ஜேவிபி யைப்பற்றிக் குறிப்பிடுகிறேன், அது மூன்று வழிகளில் பிளவுபட்டுள்ளது, ஒன்று விமல் வீரவன்ச தலைமை தாங்கும் ஜனரஞ்சக வலதுசாரி, மற்றது எப்.எஸ்.வி மற்றும் ஜே.ஏ.வி என்பனவற்றை கொண்ட தீவிர இடதுசாரி, அடுத்தது ஜேவிபி மற்றும் எப்.எஸ்.வி என்பனவற்றில் இயலாமையான நிலையில் உள்ளவர்கள் சேர்ந்து  அவர்களின் எதிர்கால ஐக்கியம் நீடிப்பது  சந்தேகமானாலும்கூட, ஐக்கிய முன்னணி அல்லது செயற்பாட்டு பிரிவு என்ற ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

இந்த புதிய இயக்கத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள், அல்லது அதன் நோக்கம் என்ன என்பது எனக்குத் தெரியாது, மற்றும் அதைப்பற்றி ஊகிப்பதிலும் எனக்கு அக்கறையில்லை. இந்த சமய பாசிச அலையின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று ஒரு புத்திசாலித்தனமான ஊகத்தையே என்னால் மேற்கொள்ள முடியும். 

உருவாகும் இந்தக் காட்சி பின் என்னவாக இருக்கும்? எண்ணை நிலத்தில் சிந்திக் கொண்டிருக்கிறது, ஒரு சிறிய தீக்குச்சி,ஒரு ஒற்றை தீப்பொறி, எவ்வளவு சிறிதாக இருந்தாலும் ஒரு ஒற்றை சம்பவம் போன்றவை  ஒரு வன்முறையான மோதலை ஏற்படுத்தலாம். ஒரு புதிய வட்டத்திலான் மோதல் மற்றும் முனைவாக்கம் ஆரம்பிக்கும். சிங்களவாகளாகிய நாங்களும்  எங்கள் சக பிரஜைகளான முஸ்லிம்களும் உளவியல் ரீதியாக பிளவு பட்டுள்ளதுடன், ஒருவரையொருவர் கண்ணோடு கண் பார்க்க இயலாமலிருக்கும் எங்கள் சக பிரஜைகளான தமிழர்களுடன் இப்போதும் நாங்கள் செய்ய முடியாமலிருப்பதைப் போல. புதிய சிங்கள பௌத்த அடிப்படை வாதம், மிதவாத முஸ்லிம் தலைவர்கள் மற்றும் பிரிவுகள் என்பனவற்றைத் தாண்டிக்கொண்டு ஸ்ரீலங்காவில் முஸ்லிம் அடிப்படை வாதத்தை  தோற்றுவிக்கும்.

செயற்பாடான முஸ்லிம் அடிப்படை வாதம் தெற்காசியாவில் பலம் பெற்று விளங்கும் உலகளாவிய ஜிகாத் இயக்கங்களை கவர்ந்திழுக்கும் காந்தத்தை போன்றது. மீந்துள்ள எல்.ரீ.ரீ.ஈ கூறுகள் முஸ்லிம் அடிப்படை வாதிகளை தேடிச் சென்று ஸ்ரீலங்காவுக்கு எதிரான செயற்பாடுகளை  இருபகுதியினரும் மேற் கொள்ள இயலக்கூடிய வகையில், தமிழ்நாட்டில் அதற்கான வழிகள் உட்பட,வளங்களையும் மற்றும் தொழிலாளர் பிரிவையும் பங்கிட்டுக்கொள்ளும், அதன்படி இப்போது நாங்கள் அனுபவிக்கும், கடுமையாக போராடிப் பெற்ற வெற்றியினால் கிடைத்துள்ள சமாதானம் காணாமற் போய்விடும். அநேக முஸ்லிம் அதிகாரிகளையும் மற்றும் வீரர்களையும் தன்னகத்தே கொண்டதாக அமைந்துள்ள ஸ்ரீலங்கா ஆயுதப் படைகள் நெறிமுறை தவறியதனால் பாதிப்படையும். பலதசாப்தங்காக நடைபெற்ற போரில் ஸ்ரீலங்காவுக்கு விசுவாசத்துடன் ஆதரவு வழங்கிய அரசாங்கங்கள் உட்பட, பில்லியன் கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் ஆதரவை ஸ்ரீலங்கா இழந்துவிடும்.

ஸ்ரீலங்காவில் இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளுக்கான எந்த அறிகுறியும் இல்லாத ஒரு நிலையிலேயே, சிங்கள பௌத்த தீவிரவாத எழுச்சி இடம்பெற்று வருகிறது, இந்த விடயம் எங்களுடைய துயரங்களுக்கெல்லாம் காரணம் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதம் அல்ல ஆனால் சிங்களத்தின் தீவிரவாதமே எல்.ரீ.ரீ.ஈ யின் பயங்கரவாதத்துக்கு காரணமாக இருந்தது என்கிற உலகத்தின் கருத்தை  பெறுவதற்காக முன் வைக்கப்படும். தமிழ் புலம் பெயர்ந்தவர்களின் பிரிவினைவாத கூறுகள் மகரகம விடயத்தை சுட்டிக்காட்டி, இதுதான் எங்களுக்கும் நடந்தது, இதுதான் எங்களுக்கும் செய்யப்பட்டது, தமிழ் பிரிவினை வாத்துக்கு எதிரான போரில் அரசாங்கத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம்களுக்கு இப்போது அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், என்று கூறுவார்கள். தார்மீக நெறிமுறைக்கான பழி தெற்கிற்கும் மற்றும் சிங்களவர்கள்மீதும் திரும்பிவிடும்.

ஒட்டுமொத்த கத்தோலிக்கர்கள் மற்றும் கிறீஸ்தவர்கள் உட்பட ஏனைய சிறுபான்மையினரின் அச்சங்கள் அதிகரிக்கும் ஏனெனில் பகுத்தறிவுள்ள எவனும், கிறீஸ்தவ அடிப்படை வாதிகள்தான் (ஆங்கிலிக்கன்கள்) எதிரிகள் மற்றும் கத்தோலிக்கர்கள் அவர்களுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என்ற, சிங்கள பௌத்த இனவாதியின் பெருந்தன்மையான ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மாட்டான். 

2003 நத்தார் சமயத்தில் சகல பிரிவினருடைய தேவாலயங்களும் தாக்குதலுக்கு உள்ளாயின, அன்னை திரேசாவின் சமாஜத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி கைது செய்யப்பட்டது, மேரி மாதாவின் திருவுருவச் சிலைக்கு தீ மூட்டியது, போன்ற நிகழ்வுகளுக்குப் பின்பு அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தெளிவாக தெரிவிப்பது, கிறீஸ்தவர்கள் ஒரு சமூகமாக ஏற்கனவே இலக்கு வைக்கப் பட்டிருப்பதுடன் எதிர்காலத்தில் இலக்காவதற்கும் இடமுண்டு என்று. (இந்த விடயம் தொடர்பாக கருத்தினால். மல்கம் ரஞ்சித் ஏற்கனவே கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்)

இரண்டு பில்லியன்  செல்வாக்குள்ள உலக சமூகத்தின் ஒரு சிறிய பகுதியாக உள்ள சிறுபான்மையினரை தனிமைப்படுத்த முயற்சிப்பது, ஸ்ரீலங்காவையும் மற்றும் சிங்களவரையும் தனிமைப்படுத்த வழி தேடுபவர்களுக்கு உதவி செய்வதாகவே அமையும்.

இதுவரை நடந்தவை ஸ்ரீலங்காவை ஒரு புதிய இஸ்ரயேலைப்போல சித்தரித்து நிலைநாட்ட முயற்சிக்கிறது, புதிய எழுச்சியான முஸ்லிம் எதிர்ப்பு பௌத்த சிங்கள தீவிரவாதம், நீண்ட காலமாக ஸ்ரீலங்காவை, பாதுகாப்பு பொறுப்பு கூறல் பொறிக்குள் மாட்டிவிட முயற்சிப்பவர்களின் வாதங்களுக்கு வலு சேர்ப்பதாக அமையும். பாதுகாப்பு பொறுப்பு கூறல் வழக்கானது, அரசாங்கமானது அதன் பிரஜைகளை அல்லது தனது பிரஜைகளின் ஒரு பகுதியினரை இன அழிப்புக்கு வழிவகுக்கும் பெரிய அளவிலான வன்முறையிலிருந்து பாதுகாக்க இயலவில்லை அல்லது விரும்பவில்லை என்பதன் அடிப்படையில் எழுந்துள்ளது.

அதேவேளை பாதுகாப்பு பொறுப்பு கூறலுக்கு (ஆர்2பி) பாதுகாப்புச்சபையின் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என்பதும் உண்மையே, ஆனால் பரந்த அளவில் அவதானிக்கப் பட்டிருப்பது, பாதுகாப்பு பொறுப்பு கூறலில்(ஆர்2பி) அல்லது பாதுகாப்பு பொறுப்பு கூறலுக்கு முந்தைய   விடயங்களில் வாதங்கள் மூலமாக நடத்தப்படும் தலையீடுகள் அத்தகைய அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை. கிணற்றுத் தவளையை போல மூலோபாய எண்ணங்களில் தங்களை புதைத்துக்கொண்ட இனவாத எழுச்சியாளர்கள் அல்லது அதன் பிரதிநிதியாக தங்களை திறமையாக கையாளுபவர்கள், இந்த முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக மேற்கு, சிங்களவர்கள் , அரசாங்கம், அல்லது நாடு மீது பிரியம் வைக்கக்கூடும் என எண்ணலாம். 

இந்த சீமான்களும் சீமாட்டிகளும், ஆப்கானிஸ்தானில், சோவியத்யூனியனுக்கு எதிராக மேற்கு, ஜிகாத்துகளுக்கு  ஆதரவளித்ததையோ மற்றும் இன்னமும் லிபியாவிலும் மற்றும் சிரியாவிலும் - தங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக - மேற்குடன் பகை கொண்டுள்ள ஒரு நாட்டுடன் அல்லது ஆட்சியுடன் யுத்தம் நடத்தும்போது, அதை செய்து வருவதை அறியமாட்டார்கள். 

மேற்கு கிறீஸ்தவர்களான சேர்பியர்கள் மீது குண்டு தாக்குதல் நடத்தி யூகோஸ்லாவியாயை நாசம் செய்து, இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளான பொஸ்னியா மற்றும் கொசாவோ என்பன பிறப்பதற்கு வசதி செய்து கொடுத்ததையும் இந்த சிங்கள இனவெறியர்கள் அறியமாட்டார்கள். பல்லின பல மத நாடான யூகோஸ்லாவியாயை ஆதிக்கம் செய்ய முயற்சித்ததால், தங்கள் நாட்டின் சேர்பியர்கள் அல்லாதோர் வாழ்ந்த பகுதிகளை (அவர்களது புனித இடங்கள் அமைந்துள்ள கோசாவோ உட்பட) இழந்ததோடு, அவர்கள் ஒரு வரலாற்று பெரும்பான்மை கொண்டிருந்த  பகுதியையும் இழந்துவிட்டார்கள்.

சமூகத்தின் இருவேறுபட்ட அடுக்குகளைப் போலுள்ள இனங்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகி மற்றும் ஒன்றுக்கொன்று எதிராக இயங்க ஆரம்பித்தால் அவை தள்ளுப்பட்டு சென்றுவிடும் அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றை தாங்கிப் பிடித்துக் கொள்ள மேலதிக அழுத்தம் கொண்டுவரப்பட வேண்டும், அதனால் மே 2009ல் இறுதியாகப் பெற்ற இராணுவ வெற்றி உட்பட எந்த இராணுவ வெற்றியுமே நீடித்து நிற்கக்கூடியதல்ல. ஸ்ரீலங்கா, தெற்காசியாவின் இஸ்ராயேல் அல்ல, சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் இயக்கம் அதன் சிறுபான்மை இனத்தவர்கள் அனைவர்கள் மேலும் செலுத்தப்பட்டால், அது ஸ்ரீலங்காவை தெற்காசியாவின் சேர்பியாவாக மாற்றிவிடும். இந்த பல்லின, பல மத, பல மொழி, நாடானது பலவந்தமாக மற்றும் தன்னிச்சையாக சிங்கள பௌத்த நாடாக மறுவரையறை செய்யப்படுவது, சுய கணிப்பை பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் வஞ்சனையை தவிர வேறொன்றும் இல்லை. அதனால் நாடு சுருங்கிவிடும், அல்லது உலகத்தினால் அதன் சிங்கள பௌத்தர்களுக்கான மையப் பகுதியாக சுருக்கப் படும், அதற்கப்பால் எதுவும் இருக்காது, நாடு உடைந்து மறைந்துவிடும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

2 comments:

  1. இந்தக் கட்டுரை சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடைந்ததா?

    ReplyDelete
  2. Really thank you very much Thilan Jayathilaka, Dear Muslim Community, please pass this article and this message to the correct places.

    ReplyDelete

Powered by Blogger.