அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு தாக்குதலை நிறுத்தவேண்டும் - பாகிஸ்தான் நீதிபதி உத்தரவு
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் முகாம்களை அமைத்து முஸ்லிம் போராளிகள் பதுங்கியுள்ளனர். அவர்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்காவின் உளவுத்துறை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது.
இதற்கு பாகிஸ்தான் போராளிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் அரசை வலியுறுத்தினர். ஆனால், அதை அந்நாட்டு அரசு செவிமடுக்கவில்லை.
இதை தொடர்ந்து லஸ்கர் இ-தொய்பா ஜமாத் அத்தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்தபோது போராளிகளுக்கு எதிரான போரை நிறுத்தும்படி அமெரிக்காவுக்கு உத்தரவிடமுடியாது என கோர்ட்டில் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.
ஆனால் அதை ஏற்க நீதிபதி உமர்கடா பாண்டியால் மறுத்து விட்டார். மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் அமெரிக்கா உளவுதுறை நடத்தும் ஏவுகணை தாக்குதல் பாகிஸ்தானின் கொள்கைக்கும், இறையாண்மைக்கும் எதிரானது. ஆனால் அமெரிக்கா நடத்தும் போரை நிறுத்தும்படி உத்தரவிடமுடியாது. இருந்தாலும் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்தும் தாக்குதலை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குறிய வழிகாட்டுதலுக்கு அரசியல் சட்டம் கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டது.
Post a Comment