'முஸ்லிம் நாடுகளுக்கு முஸ்லிம்களை தூதுவராக அனுப்ப தேவையில்லை'
சவூதி அரேபியாவிற்கு தமிழர் ஒருவரையே தூதுவராக அனுப்ப வேண்டும். இதனை உலமா சபையோ ஏனைய அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புக்களோ எதிர்க்குமேயானால் கடுமையான எதிர் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் சந்திக்க நேரிடும் என்று பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
ஈரானில் புத்தர் சிலைகளுக்கு தடைவிதிக்கப்பட்டால் இலங்கையிலும் ஈரான் தூதரகத்தினால் உள்நாட்டுப் பாடசாலைகள் மற்றும் பொது நூலகங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இஸ்லாம் அடிப்படைவாத புத்தகங்களுக்கும் தடைவிதிக்க நேரிடும் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு -7 தும்முல்ல சந்தியில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் தலைமையலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடவத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் நாடுகளுக்கு முஸ்லிம்களை தூதுவராக அனுப்ப வேண்டும் என்று உலமா சபை உட்பட பல முஸ்லிம் அமைப்புக்கள் குரல் கொடுக்கின்றன. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது ஒரு பௌத்த நாடு. உலகத்தில் வேறு எங்கும் இல்லாத மத உரிமைகள் இலங்கையில் ஏனைய மதத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சவூதி போன்ற முஸ்லிம் நாடுகளில் மிகவும் அடிப்படைவாத முறைமையே காணப்படுகின்றது.
இதேவேளை, எந்த நாட்டிற்கு எந்தத் தூதுவரை அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. தமிழர் ஒருவரை சவூதிக்கு அனுப்ப வேண்டாமென்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று அவர் தெரிவித்தார். vi
தமிழரோ அல்லது சிங்களவரோ "கத்னா" செய்துதான் அனுப்ப வேண்டும் ...அதுக்கு "அதில்" கால்வாசியை இழக்க வேண்டும். சம்மதமா காவியாரே? சம்மதமா?
ReplyDeleteஹலால் உணவு சாப்பிடாத இவர்கள் அங்கு சென்று என்ன சாப்பிடுவீர்கள்? பாலைவனத்து மணலை உண்டு பெற்றோலை குடிப்பார்களோ ?
ReplyDeleteபொதுபல்லு சேன அறிவற்ற மூடர்களுக்கு எதோ மண்டைக்குழப்பம் போலிருக்கிறது உடனடியாக வத்தியம் செய்யவில்லையென்றால் நிலைமை படுமோசமாக வாய்ப்பிருக்கிறது......
ReplyDeleteநாம் இப்படியே பார்த்துட்டு இருண்ட இன்னும் நிறைய நிபண்டனைகல் வரும்
ReplyDeleteநாம் இப்படியே பார்த்துட்டு இருண்ட இன்னும் நிறைய நிபண்டனைகல் வரும்
ReplyDelete